Home /News /national /

பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு 51 அடி உயர இரும்பு சிலை.. குஜராத் பாஜக பிரமுகர் ஏற்பாடு

பிறந்தநாளில் பிரதமர் மோடிக்கு 51 அடி உயர இரும்பு சிலை.. குஜராத் பாஜக பிரமுகர் ஏற்பாடு

பிரதமர் மோடிக்கு 51 அடி இரும்பு சிலை

பிரதமர் மோடிக்கு 51 அடி இரும்பு சிலை

தெற்கு குஜராத் பகுதியில் உள்ள அம்ரேலி மாவட்டத்தின் சர்வகுண்டலா என்ற பகுதியில் பிரதமருக்கு 51 அடி இரும்பு சிலை அமைக்க மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஏற்பாடுகளை செய்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India
    பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பாஜக பிரமுகர்கள் மற்றும் பிரதமரின் நலன் விரும்பிகள் பல்வேறு நிகழ்வுகளுக்கும், நலத் திட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட சில தனித்துவமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தெற்கு குஜராத் பகுதியில் உள்ள அம்ரேலி மாவட்டத்தின் சர்வகுண்டலா என்ற பகுதியில் பிரதமருக்கு 51 அடி இரும்பு சிலை அமைக்க மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஏற்பாடுகளை செய்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று இதற்கான பூமி பூஜைகளை நடைபெறுகின்றன.

    அந்த மாவட்டத்தின் பாஜக துணை தலைவர் சுரேஷ் பன்சூரியா அங்குள்ள தொழிலதிபர்களுடன் இணைந்து பிரதமர் மோடியின் பிறந்தநாளான இன்று 400 ஜோடிக்கு இலவச திருமணம் செய்து வைக்கின்றார். அத்துடன் பிரதமர் மோடியின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்துகின்றனர். இந்த யாகத்தில் சுமாப் 10,000 பேர் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: PMModiBirthday : பிரதமர் மோடி பெற்ற சர்வதேச விருதுகள் என்னென்ன தெரியுமா?

    மேலும், பிரதமர் மோடியின் 51 அடி இரும்பு சிலை அமைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர். சிலை கட்டுமானத்திற்கான பூமி பூஜையும் பிரதமரின் பிறந்தநாளான இன்று நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் வாட்நகர் பகுதியில் பிறந்த மோடி 2001ஆம் ஆண்டில் முதல்முறையாக அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்கும் வரை தோல்வியே சந்திக்காமல் அம்மாநில முதலமைச்சராக தொடர்ந்தார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Gujarat, Modi Birthday, PM Modi

    அடுத்த செய்தி