‘மிடில் க்ளாஸ் மக்கள்தான் நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்!’ - மோடி நம்பிக்கை

'நடுத்தர வர்க்கத்தினர்தான் சட்டத்தை மதிப்பார்கள். சட்டத்தை மதித்து விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்’.

‘மிடில் க்ளாஸ் மக்கள்தான் நாட்டை முன்னேற்றப் போகிறார்கள்!’ - மோடி நம்பிக்கை
மோடி நேர்காணல்
  • News18
  • Last Updated: April 9, 2019, 7:23 PM IST
  • Share this:
மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கான நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய மோடி, “நாட்டில் கவனிக்கப்பட வேண்டிய முதல் விஷயம் வளர்ச்சி. வளர்ச்சிக்கு இருமுகங்கள் உள்ளன. முதலாவது, சமூகக் கட்டமைப்பு. இரண்டாவது, உள்கட்டமைப்பு வளர்ச்சிகள். நாட்டில் இன்னும் பலர் அடிப்படை அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யமுடியாத நிலையில் உள்ளனர்.

வீடில்லாதவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். மருத்துவ வசதியும் கல்வியும் ஏழைகளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் மரியாதை உடனான வாழ்க்கையை வாழ வகை செய்ய வேண்டும். இந்தியாவின் பலமே புதிதாக உருவெடுத்துள்ள நடுத்தர வர்க்கம் தான். இந்த வர்க்கத்தினரை முன்னாள் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆனால், நடுத்தர வர்க்கம்தான் நாட்டின் வளர்ச்சியில் மிகப்பெரும் பங்கு வகிக்கப்போகிறார்கள்.


நடுத்தர வர்க்கத்தினர்தான் சட்டத்தை மதிப்பார்கள். சட்டத்தை மதித்து விதிகளுக்கும் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். நடுத்தர மக்கள்தான் வரியை முறையாகச் செலுத்துவார்கள். அரசிடம் குறைவான எதிர்பார்ப்பே அவர்களிடம் இருக்கும். எங்கள் பணியே அவர்களைப் பாதுகாப்பதுதான். ஆனால், காங்கிரஸ் கட்சி நடுத்தர வர்க்க மக்களை அவமானப்படுத்தியது.

இந்திய கிராமப்புறங்களைப் பொறுத்த வரையில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நாங்கள் பணியாற்றுகிறோம். மேலும், 60 வயதுக்குப் பின்னர் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் நாங்கள் உறுதி செய்யும் பணியில் உள்ளோம். இதேபோல், சிறு தொழில் செய்வோருக்கும் நாங்கள் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்தத் துறையில் வரும் காலங்களில் 100 லட்சம் கோடி ரூபாய் வரையிலான முதலீடுகள் இருக்கும். இவை நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்” என்றார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading