ஹோம் /நியூஸ் /இந்தியா /

WATCH - இசை கலைஞர்களுடன் குஷியாக டோல் முரசு அடித்த பிரதமர் மோடி.. வீடியோ!

WATCH - இசை கலைஞர்களுடன் குஷியாக டோல் முரசு அடித்த பிரதமர் மோடி.. வீடியோ!

டோல் வாத்தியம் வாசித்த பிரதமர் மோடி

டோல் வாத்தியம் வாசித்த பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரம்பரிய டோல் இசை கலைஞர்களுடன் இணைந்து பிரதமர் மோடியும் டோல் முரசை அடித்து மகிழ்ந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.75,000 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா வந்தடைந்த பிரதமர் மோடி, நாட்டின் 6ஆவது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, நாக்பூர் மெட்ரோவின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து பயணித்தார். அத்துடன் இரண்டாம் கட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, பாலாசாஹேப் தாக்ரே மகாராஷ்டிரா சம்ருத்தி மகாமார்க் என்ற திட்டத்தின் கீழ் நாக்பூர் மற்றும் ஷீரடி இடையே 520 கிமீ நெடுஞ்சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். நாக்பூர் வருகை தந்த பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு டோல் என்ற பெரிய முரசுகளை அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த டோல் வாத்தியத்தை அடிக்கும் கலைஞர்களை பார்த்ததும் ஆர்வத்துடன் அங்கு சென்ற பிரதமர் மோடி, அவர்களுடன் இணைந்து தானும் டோல் வாத்தியத்தை அடித்து மகிழ்ந்தார். இதை பார்த்து அங்கிருந்த இசை கலைஞர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

பிரதமர் மோடியும் தான் வாத்தியம் அடிக்கும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் இதை பகிர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

First published:

Tags: Maharashtra, Nagpur, PM Modi, Viral Video