முகப்பு /செய்தி /இந்தியா / இந்த தலைமுறை இளைஞர்கள் கஷ்டங்களைச் சந்திக்கப் போவதில்லை - ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி உறுதி

இந்த தலைமுறை இளைஞர்கள் கஷ்டங்களைச் சந்திக்கப் போவதில்லை - ஜம்மு காஷ்மீரில் பிரதமர் மோடி உறுதி

காஷ்மீரின் கடந்த கால தலைமுறையினர் சந்தித்த கஷ்டங்களை இந்த கால இளைஞர்கள் சந்திக்க போவதில்லை என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரின் கடந்த கால தலைமுறையினர் சந்தித்த கஷ்டங்களை இந்த கால இளைஞர்கள் சந்திக்க போவதில்லை என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

காஷ்மீரின் கடந்த கால தலைமுறையினர் சந்தித்த கஷ்டங்களை இந்த கால இளைஞர்கள் சந்திக்க போவதில்லை என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

  • Last Updated :

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு பஞ்சாயத்து ராஜ் தின விழா, வளர்ச்சி திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் சட்டப் பிரிவு 370ஐ நீக்கத்திற்கு பின் பிரதமர் மோடி அங்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை. பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களும் உடன் இருந்தனர்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சம்பா மாவட்டத்தில் பள்ளி என்ற பகுதியில் நடைபெற்ற பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இந்நிகழ்வில், நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

இந்த விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், "ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தற்போது எழுதப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு பல தனியார் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. முன்பெல்லாம் மாநிலத்தில் ஏதேனும் திட்டத்தின் கோப்புகள் நகர வேண்டும் என்றால் 2-3 மாதங்கள் பிடிக்கும். தற்போது இது மூன்று வாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாவும் மீண்டும் உயிர்ப்பித்துள்ளது.

இதையும் படிங்க: பூமிக்குள் பணம்.. சுவருக்குள் வெள்ளி... அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்

கன்னியாகுமரியின் தேவியும் ஜம்மு காஷ்மீரின் வைஷ்னவ் தேவியும் ஒரே சாலை மூலம் சந்திக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஜம்மு காஷ்மீரின் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதே அரசின் முக்கிய நோக்கம். மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் தற்போது காஷ்மீரில் அமல்படுத்தப்படுகிறது. வளர்ச்சி என்ற செய்தியுடன் காஷ்மீருக்கு நான் வந்துள்ளேன். ரூ.20,000 கோடிக்கான வளர்ச்சி திட்டத்தை ஜம்மு காஷ்மீருக்கு அர்ப்பணிக்கிறோம். காஷ்மீரின் கடந்த கால தலைமுறையினர் சந்தித்த கஷ்டங்களை இந்த கால இளைஞர்கள் சந்திக்க போவதில்லை. இதை நான் உங்களுக்கு உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் முதல் கார்பன் இல்லா பஞ்சாயத்தாக பள்ளி பஞ்சாயத்து உருவெடுத்துள்ளது. இதற்காக மக்களை நான் பாராட்டுகிறேன்" எனத் தெரிவித்தார்.

top videos

    பின்னர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையே கட்டப்பட்டுள்ள 8.45 கிமீ பனிஹல்-குவாசிகுன்ட் சுரங்க சாலையை தொடங்கி வைத்த பிரதமர், ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

    First published:

    Tags: Jammu and Kashmir, PM Modi