சமூக வலைதளங்களில் ஒலிம்பிக் வீரர்களுக்கான ஆதரவு பிரச்சாரங்களில் பங்கேற்க வேண்டும்; பிரதமர் மோடி

கோப்புப் படம்

டோக்யோ ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை சுமந்து சென்ற காட்சி, தன்னை மட்டும் அல்லாமல் நாட்டையே மகிழ்வித்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு சவால்களை வென்றுள்ளதாகவும், அவர்களுக்கு நமது அன்பும், ஆதரவும் அவசியம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இந்த மாதத்துக்கான நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,

  கார்கில் போர் வெற்றி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு நாம் வீர வணக்கம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

  கார்கில் போர் இந்திய படைகளின் துணிச்சலுக்கும், கட்டுப்பாட்டு அமைப்புக்கும் சிறந்த உதாரணம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

  Also read: மன் கி பாத் நிகழ்ச்சியில் யூடியூபரை புகழ்ந்த பிரதமர் மோடி!

  வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சிறப்பு வாய்ந்த நாள் என்றும், அன்றைய தினம், நாடு 75வது சுதந்திர ஆண்டுக்குள் நுழைவதாகவும் குறிப்பிட்டார்.

  தண்டி யாத்திரையை நினைவுகூரும், அம்ருத் மகோத்சவம் வெறும் அரசு விழா இல்லை என்றும், அது 130 கோடி மக்களின் உணர்வு எனவும் கூறினார்.

  டோக்யோ ஒலிம்பிக் தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியை சுமந்து சென்ற காட்சி, தன்னை மட்டும் அல்லாமல் நாட்டையே மகிழ்வித்தது என்றும், சமூக வலைதளங்களில் இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கான ஆதரவு பிரச்சாரங்களில் மக்கள் பங்கேற்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

  Also read: இனி அரசு ஊழியர்கள் கட்டாயம் வரதட்சணை வாங்க முடியாது... செக் வைத்த அரசு!!

  நாட்டுக்கு பெருமை சேர்ப்பதற்காக டோக்யோ சென்றுள்ள ஒலிம்பிக் வீரர்கள் மீது அழுத்தத்தை அதிகரிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வீரர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

  ஆகஸ்ட் மாதம் தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணிந்து நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மக்களுக்காக இலவசமாக ஆட்டோ ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்திய சமூக ஆர்வலர் ராதிகா சாஸ்திரிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

  கொரோனா பரவல் இன்னும் ஓயாத நிலையில், மக்கள் விழாக்காலங்களில் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: