முகப்பு /செய்தி /இந்தியா / மாநில அரசிடம் உள்ள ரூ.38,000 கோடி நிதியை கட்டுமான தொழிலாளர்களுக்காக பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை

மாநில அரசிடம் உள்ள ரூ.38,000 கோடி நிதியை கட்டுமான தொழிலாளர்களுக்காக பயன்படுத்துங்கள் - பிரதமர் மோடி கோரிக்கை

தேசிய தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

தேசிய தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

PM Modi : தொழிலாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத், இஎஸ்ஐ போன்ற நலன்கள் சென்று சேர்வதை துறை சார் அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Andhra Pradesh, India

கட்டுமான தொழிலாளர்களுக்கான செஸ் (Cess) வரி மூலம் மாநில அரசுக்கு கிடைத்துள்ள ரூ.38,000 கோடி நிதியை அந்த தொழிலாளர்களுக்கு பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார். ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொழிலாளர் நல அமைச்சர்களின் தேசிய தொழிலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.

இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டு உரையில் அவர் கூறியதாவது, "இந்தியாவின் கனவுகளையும் விருப்பங்களையும் நனவாக்குவதில் இந்தியாவின் தொழிலாளர் சக்தி மிகப் பெரிய பங்களிப்பை செய்யவிருக்கிறது. இந்த சிந்தனையோடு கோடிக்கணக்கான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக நாடு தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் தொழிலாளர் சக்தியைக் கொண்டுவருவதற்கான முக்கிய முயற்சிகளில் ஒன்றாக இ-ஷ்ரம் இணைய பக்கம் விளங்குகிறது. ஓராண்டு காலத்திற்குள் இந்த இணைய பக்கத்தில் 28 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த இணைய  பக்கம் மூலம் குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர் பயனடைந்துள்ளனர். மாநில இணையப்பக்கங்களை இ-ஷ்ரம் இணையபக்கத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு அனைத்து மாநில அமைச்சர்களும் ஒத்துழைப்பு தந்து செய்து கொடுக்க வேண்டும்.

நமது தொழிலாளர் சக்தியில் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்ற கட்டுமான தொழிலாளர்கள் விளங்குவதை அனைவரும் அறிவார்கள்.இவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செஸ் வரி எனும் கூடுதல் வரியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.இந்த கூடுதல் வரியிலிருந்து சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் மாநில அரசுகளால் பயன்படுத்தப்படவில்லை என்ற தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தொகையை தொழிலாளர்களுக்காக முழுமையாக பயன்படுத்துங்கள்.

இதையும் படிங்க: ‘காங்கிரஸ் கட்சியின் படு தோல்விகளுக்கு ராகுல்தான் காரணம்’ – குலாம் நபி ஆசாத் பரபரப்பு குற்றச்சாட்டு

தொழிலாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத், இஎஸ்ஐ போன்ற நலன்கள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். நமது நாட்டின் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்துவதில் இத்தகைய கூட்டு முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அனைவரும் உறுதி செய்யவேண்டும்." இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், ராமேஸ்வர் தெலி மற்றும் பல்வேறு மாநிலங்களின் தொழிலாளர் நல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Labour Law, PM Modi