Home /News /national /

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஹைதராபாத் வந்த பிரதமர் மோடி - புறக்கணித்த கேசிஆர்!

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஹைதராபாத் வந்த பிரதமர் மோடி - புறக்கணித்த கேசிஆர்!

ஹைதரபாத் வந்தடைந்த பிரதமர் மோடி

ஹைதரபாத் வந்தடைந்த பிரதமர் மோடி

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் இரு நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத் வந்தடைந்தார். ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றார்.

    அதேவேளை, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரதமர் மோடியை நேரில் வரவேற்கவில்லை. அன்மை காலமாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கும், பாஜகவுக்கும் மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், பிரதமர் மோடியை சந்திப்பதை முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மீண்டும் தவிர்த்துள்ளார்.

    முன்னதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் ஹைதராபாத் வந்துள்ளனர்.


    இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களில் கட்சி வளர்ப்பதை குறிவைத்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. தென் மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டுமே பாஜக ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவை பெரும் சக்தியாக மாற்ற முக்கிய யூகங்கள் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக இன்னும் இரு ஆண்டுகளுக்குள் தெலங்கானாவில் தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதையும் படிங்க: உதய்பூர் படுகொலையுடன் ஒற்றுமை - அமராவதி கொலை வழக்கு NIA விசாரணைக்கு மாற்றம் 

    அங்கு ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு கடும் சவால் கொடுக்க பாஜக மும்முரமாக பணியாற்றி வருகிறது. நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 119 தொகுதிகளில் இருந்து தொண்டர்களை ஹைதராபாத்தை நோக்கி பாஜக குவித்து வருகிறது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Hyderabad, JP Nadda, PM Modi, Tamilisai Soundararajan

    அடுத்த செய்தி