உலக தலைவர்களில் பிரதமர் மோடியே மிகப் பிரபலம்..! ஆய்வில் வெளியான தகவல்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட 13 உலகத் தலைவர்களை விடவும் பிரபலமான நபராக உள்ளார்.

  • Share this:
    உலக நாடுகளின் தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார்.

    உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் புகழ் குறித்து தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகின் 13 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர்.  ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் அடங்குவர்.

     



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். இந்த கணக்கெடுப்பில் சுமார் 70 சதவிகித மக்கள் மோடியை பிரபலமான தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர்.இதன்மூலம் பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரை விடவும் பிரபலமான நபராக உள்ளார். பிரதமர் மோடியின் புகழ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: