பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி... வெற்றி பெறுவோர் பிரதமருடன் கலந்துரையாட வாய்ப்பு!

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி... வெற்றி பெறுவோர் பிரதமருடன் கலந்துரையாட வாய்ப்பு!
பிரதமர் நரேந்திர மோடி
  • News18
  • Last Updated: December 6, 2019, 11:55 AM IST
  • Share this:
பள்ளி மாணவர்களுக்கான போட்டி ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மனஅழுத்தம் இல்லாத தேர்வுச்சூழலை உருவாக்க இணைந்து செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

இந்த போட்டித் தேர்வுக்கு பரிக்ஷா பே சர்ச்சா என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.





அவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 5 தலைப்புகளில் 1500 எழுத்துகளில் தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டும். பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் தாங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை 500 எழுத்துகளில் தெரிவிக்கலாம்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதுடன், பிரதமருடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading