மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் இன்று. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள வாஜ்பாயின் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று வாஜ்பாய் நினைவிடத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் வாஜ்பாய் குறித்து தான் பேசிய காணொலி ஒன்றை வெளியிட்டு நினைவு கூர்ந்தார்.
அதில், "ஒரு சிறந்த தலைவரான வாஜ்பாய், நாட்டிற்கு தன்னிகரில்லா தலைமையாக இருந்தார். ஒவ்வொரு இந்தியர் மனதிலும் வாஜ்பாய் தனித்துவமான இடத்தை அவர் பிடித்துள்ளார். கட்டுமானம், கல்வி, சர்வதேச கொள்கை என பல துறைகளில் இந்தியாவை உச்சங்களை தொட வைத்தவர். அவரை இந்நாளில் இதயப்பூர்வமாக வணங்குகிறேன்" என்றார். மத்தியில் காங்கிரஸ் அல்லாமல் அமைந்த அரசில் முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமை வாஜ்பாயை சாரும். இவர் தலைமையில் தான் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது.’ என்று பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AB Vajpayee, Atal Bihari Vajpayee, Delhi, PM Modi