ஹோம் /நியூஸ் /இந்தியா /

“ஒற்றுமை மேலும் வலுப்பட பிரார்த்திக்கிறேன்”.. பிரதமர் பொங்கல் வாழ்த்து..!

“ஒற்றுமை மேலும் வலுப்பட பிரார்த்திக்கிறேன்”.. பிரதமர் பொங்கல் வாழ்த்து..!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

Pongal 2023 | உலகத் தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள் என பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

அறுவடை நாட்களை வரவேற்பு பொங்கல் திருநாளை இன்று உலகத் தமிழர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். வீடுகளுக்கு வண்ணம் பூசி, புத்தாண்டை அணிந்து புது பானையில் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவர். பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு வணங்குவர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத் தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன். பொங்கல் விழா நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த அறுவடைத் திருநாள் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் செழுமையையும் நிறைவையும் தருவதாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.

First published:

Tags: PM Modi, Pongal festival