மோடிக்கும் அமித் ஷாவுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட தெரியவில்லை: மம்தாவின் உடல்நிலை பற்றி விசாரிக்கவே இல்லை- திரிணாமுல் வேதனை

மோடிக்கும் அமித் ஷாவுக்கும் குறைந்தபட்ச மரியாதை கூட தெரியவில்லை: மம்தாவின் உடல்நிலை பற்றி விசாரிக்கவே இல்லை- திரிணாமுல் வேதனை

மோடி, அமித் ஷா

மம்தா பானர்ஜி ஸ்கூட்டர் ஓட்டியதைக் கிண்டலடித்த மோடி, “நாம் யாரும் காயமடைவதை விரும்பவில்லை, ஆனால் நந்திகிராமில் ஸ்கூட்டர் கீழே விழுமானால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்” என்று பேசியதைத்தான் உள்ளர்த்தம் இருப்பதாக பார்த்தா சாட்டர்ஜி இப்போது சாடியுள்ளார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கொஞ்சம் கூட மரியாதை, விநயம் தெரியாதா? திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார், அவரது உடல் நலம் எப்படி இருக்கிறது என்று இவர்கள் விசாரிக்கக் கூட இல்லையே என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பார்த்தா சாட்டர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

    நந்திகிராமில் தேர்தல் பிரச்சாரத்தின் போது காரில் வந்த மம்தா பானர்ஜியை சிலர் தாக்கியதால் அவர் காலில்,கழுத்தில் காயம் ஏற்பட்டதாக அவரே கூறினார். இது பொய், நாடகமாடுகிறார் என்று பாஜக விமர்சித்தது.

    நேரில் பார்த்தவர்களும் மம்தாவுக்கு நடந்தது தாக்குதல் அல்ல, அசம்பாவிதம் கார் கதவில் அடிபட்டது என்று கூறியதாகத் தொலைக்காட்சிச் செய்திகளும் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் மம்தா உடல்நிலை குறித்து விசாரிக்க அமித் ஷாவுக்கும், மோடிக்கும் சில நிமிடங்கள் போதும் ஆனால் அவர்களுக்கு அந்த மரியாதை நிமித்தம் கூட இல்லை என்று பார்த்தா சாட்டர்ஜி விமர்சித்துள்ளார்.

    மேலும் தேர்தல் ஆணையம் ஒரு முதல்வருக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுவதை கவனமேற்க வேண்டும் என்று கூறினார் பார்த்தா.

    “பிரதமர் மோடி அன்று பேசும்போது, தீதியின் ஸ்கூட்டி நந்திகிராமில் கீழே விழும் என்றார். இப்படிப்பட்ட கருத்து பாஜக தலைவரின் கொடூரமான குணத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறது. இப்போது மம்தா காயமடைந்த நிலையில் பிரதமர் கூறியதற்கு புதிய அர்த்தமே கிடைத்து விட்டது. ஒரு பிரதமர் இப்படியா பேசுவது” என்று சாடினார் பார்த்தா சாட்டர்ஜி.

    அன்று மம்தா பானர்ஜி ஸ்கூட்டர் ஓட்டியதைக் கிண்டலடித்த மோடி, “நாம் யாரும் காயமடைவதை விரும்பவில்லை, ஆனால் நந்திகிராமில் ஸ்கூட்டர் கீழே விழுமானால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும்” என்று பேசியதைத்தான் உள்ளர்த்தம் இருப்பதாக பார்த்தா சாட்டர்ஜி இப்போது சாடியுள்ளார்.

    மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் களைக்கட்டியது என்பதை விட பெரிய போர்க்களமாகி வருகிறது. தனிநபர் தாக்குதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது.

    மேற்கு வங்கத்தில் மக்கள் நலன் சார்ந்த முக்கிய விஷயங்கள் மீது கவனம் செலுத்தாமல் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பது என்பதாகப் போய்க்கொண்டிருக்கிறது.  காங்கிரஸ், இடதுசாரி, ஐஎஸ்எஃப் கூட்டணிதான் மக்கள் பிரச்சினைகளை பேசுகிறது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்ட விலை உயர்வு போன்ற வாழ்வாதாரமான பிரச்னைகளைப் பேசுவதாக அங்கு அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: