Home /News /national /

பீகார் கொரோனா பரிசோதனை பட்டியலில் மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ரா பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை!

பீகார் கொரோனா பரிசோதனை பட்டியலில் மோடி, அமித்ஷா, பிரியங்கா சோப்ரா பெயர்கள் இடம்பெற்றதால் சர்ச்சை!

Modi - amitshah

Modi - amitshah

மோசடியாக தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் பிரதமர் மோடி பீகாரின் புரான் எனும் கிரமத்தில் வசித்துவருபவர் என சுட்டிக்காட்டி அவரின் பெயர் மூன்று முறை அதில் இடம்பிடித்திருந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய பிரபலங்களின் பெயர்கள் பீகாரில் உள்ள குறிப்பிட்ட சுகாதார மையத்தின் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்களின் பட்டியலில் பல முறை இடம்பிடித்துள்ளது. இஷ்டம் போல பெயர் பட்டியலை போலியாக டேட்டா ஆபரேட்டர்கள் தயாரித்திருப்பது சரிபார்ப்பு பணிகளின் போது அம்பலமாகி இருக்கிறது.

பீகார் மாநில சுகாதாரத்துறையின் தரவுகளை நம்புவதாக இருந்தால், அம்மாநிலத்தின் அர்வால் மாவட்டத்தில் கர்பி வட்டார சுகாதார மையங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகன் ராகுல் காந்தி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கடந்த அக்டோபர் 27ம் தேதியன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்கின்றனர். அதுவும் ஒரு முறை அல்ல பல முறை.

மேற்கண்ட பிரபலங்கள் யாருமே பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்களோ அங்கு வசிப்பவர்களோ இல்லை என்ற நிலையில் இவர்கள் அங்குள்ள கிராமங்களில் வசிப்பதாக கணக்கு காட்டி போலியாக பட்டியல் தயாரித்திருக்கின்றனர் அங்கு பணியாற்றி வரும் டேட்டா ஆபரேட்டர்கள்.

Also read:  பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரவுடிக்கு தர்ம அடி கொடுத்த பெண்கள்

மோசடியாக தயாரிக்கப்பட்டிருக்கும் அந்த பட்டியலில் பிரதமர் மோடி பீகாரின் புரான் எனும் கிரமத்தில் வசித்துவருபவர் என சுட்டிக்காட்டி அவரின் பெயர் மூன்று முறை அதில் இடம்பிடித்திருந்தது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் பெயர் இரண்டு முறையும், அக்‌ஷய் குமாரின் பெயர் நான்கு முறையும் இருந்தது.

அமெரிக்காவில் வசித்து வரும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயர் இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஆறு முறை இடம்பிடித்திருந்தது. பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்கள் பீகார் மாநிலத்தில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து கொண்டதாகவும் அவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் என வந்ததாகவும் அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Also read:  மாடல் அழகியை ஃபோட்டோஷூட் என வரவழைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கும்பல் - பெண் உடந்தை

மாநில சுகாதாரத்துறையின் சரிபார்ப்பு பணிகளின் போது இந்த மோசடி அம்பலத்துக்கு வந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பட்டியலை உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாக போலியாக தயார் செய்ததாக டேட்டா ஆபரேட்டர்கள் இருவர் தெரிவித்திருந்த நிலையில், அதனை உயர் அதிகாரிகள் மறுத்துள்ளதுடன் டேட்டா ஆபரேட்டர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Published by:Arun
First published:

Tags: Amit Shah, Bihar, Covid-19, Narendra Modi

அடுத்த செய்தி