விரைவில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை...!

மோடி

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமை என்று பிரதமர் கூறினார். எனவே, இந்த விவகாரத்தில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அயோத்தி விவகாரம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

    அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசு விசாரித்தது. ரஞ்சன் கோகாய், வரும் 17-ம் தேதி ஓய்வுபெற உள்ளதால், அதற்கு முன்னதாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதை குறிப்பிட்டார்.

    நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது அனைவரின் கடமை என்று பிரதமர் கூறினார். எனவே, இந்த விவகாரத்தில் தேவையில்லாத கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

    Also see...

    Published by:Vinothini Aandisamy
    First published: