மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றம் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது தான் வடகிழக்கு கவுன்சில்.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு, குடிநீர் வளம், சுற்றுலா மேம்பாடு, விவசாயம் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட முக்கியமான அம்சங்களில் என்இசி வாகனம் செலுத்தி, மாநிலங்களின் தேவைகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான திட்டங்களை பெற்று வடகிழக்கு மாநிலங்களில் அதை நிறைவேற்றி வருகின்றன. அந்த என்இசி எனப்படும் வடகிழக்கு கவுன்சிலின் இன்று கொண்டாப்பட்டது.
மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவின்போது பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் சுமார் 2,450 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தும், திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதேபோல் அனைத்து வடகிழக்கு மாநிலங்களும் பயன்பெறும் வகையில் முக்கிய சாலைத் திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அதோடு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேனி வளர்ப்பு, ஒருங்கிணைந்த காளான் வளர்ப்புத் திட்டங்களுக்கான கட்டடங்களையும் மோடி திறந்து வைத்தார். அதே போல் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள இளையோர் பயன்பெறும் வகையில் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மிசோரம், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் 21 இந்தி நூலகங்களையும் மோடி திறந்து வைத்தார். வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த விருந்தினர் உபசரிப்பு திட்டம் செயலபடுத்தப்பட்டு வருகிறது. அதற்கான கட்டடங்களையும் பிரதமர் மோடி திறந்து வைத்து, பார்வையிட்டார்.
மத்திய அரசின் வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் என்இசி எனப்படும் வடகிழக்கு கவுன்சில் மூலம் இது போன்ற வளர்ச்சிப் பணிகள் திறம்பட செயல்படுத்தப்படுகின்றன. மேலும் வடகிழக்கு பிராந்தியங்கள் இன்னும் முழுமையான வளர்ச்சியடைய மத்திய அரசு என்இசி மூலம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.