புதிய கல்வி கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் - பிரதமர் மோடி
புதிய கல்வி கொள்கை குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று மாலை உரையாற்றினார்.

பிரதமர் மோடி
- News18 Tamil
- Last Updated: August 1, 2020, 6:04 PM IST
புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்து நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, 21-ம் நூற்றாண்டின் அறிவின் யுகமாக புதிய கல்வி கொள்கை அமையும். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்பதே இதன் நோக்கம். நம் குறைபாடுகளை நாம் முதலில் உணர வேண்டும்.
புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வேலை தேடுபவர்களை உருவாக்குவது அல்ல புதிய கல்வி கொள்கை, வேலை கொடுப்பவர்களை உருவாக்குவது தான். மாணவர்களின் பாடச்சுமை இதன் மூலம் குறையும். இது தனிமனித திட்டமல்ல, ஒத்துமொத்த இந்தியாவிற்கான திட்டம்“ என்றார்.