Home /News /national /

மீண்டும் பிரதமராக பதவியேற்று புதிய சாதனைக்கு சொந்தக்காரரான மோடி!

மீண்டும் பிரதமராக பதவியேற்று புதிய சாதனைக்கு சொந்தக்காரரான மோடி!

பிரதமராக பதவியேற்ற மோடி

பிரதமராக பதவியேற்ற மோடி

ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதமராக பதவிவகித்தவர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் வரிசையில் மோடியும் புதிதாக இணைந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்று புதிய சாதனையை சப்தமில்லாமல் படைத்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், பிரதமர் மோடி நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

    பிரதமர் மோடியுடன் அவரது அமைச்சரவையும் பொறுப்பேற்றுக்கொண்டது.

    இதையும் படிங்க... மோடி அமைச்சரவையில் யார்.. யார்...?

    ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதமராக பதவிவகித்தவர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகியோர் வரிசையில் மோடியும் புதிதாக இணைந்துள்ளார்.

    இந்த வரிசையில் வாஜ்பாய் மற்றும் மோடி மட்டுமே பாஜகவை சேர்ந்தவர்கள். மற்ற அனைவரும் காங்கிரசைச் சேர்ந்தவர்கள்.

    இரண்டாவது முறையாக நேற்று பிரதமரான மோடி, ஒரு சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, காங்கிரசை சாராத ஒருவர் 5 ஆண்டுகள் பிரதமர் பதவிக்காலத்தை நிறைவு செய்து மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றவர் என்ற சாதனையை மோடி படைத்துள்ளார்.



    பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பிரதமர் ஆக பதவி வகித்தாலும், அவர் தனது முதல் ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க...

    பாஜகவின் அடுத்த தலைவர் இவரா...?

    மோடி அமைச்சரவையில் கழற்றி விடப்பட்ட கூட்டணி கட்சிகள் எவை...?

    Published by:Sankar
    First published:

    Tags: Modi Cabinet, PM Modi

    அடுத்த செய்தி