ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் மோர்பி பாலம் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

குஜராத் மோர்பி பாலம் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது - பிரதமர் மோடி

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, தனது கடமையை நிறைவேற்ற தாம் கெவாடியாவில் இருந்தாலும், தனது எண்ணங்கள் எல்லாம் பால விபத்து நடைபெற்ற மோர்பியிலே இருக்கிறது என்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Gujarat, India

மோர்பி மீட்புப் பணியில் எவ்வித குறைபாடும் இருக்காது என நாட்டு மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின், பிறந்த நாள் தேசிய ஒற்றுமை தினமாக கடைப் பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கெவாடியாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின், பிரமாண்ட உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். மேலும், சிலை அடிவாரத்தில் பால் ஊற்றினார்.இதையடுத்து முப்பைட வீரர்கள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து பேசிய பிரதமர் மோடி, தனது கடமையை நிறைவேற்ற தாம் கெவாடியாவில் இருந்தாலும், தனது எண்ணங்கள் எல்லாம் பால விபத்து நடைபெற்ற மோர்பியிலே இருக்கிறது என்றார். மோர்பி மீட்புப் பணியில் எவ்வித குறைபாடும் இருக்காது என நாட்டு மக்களுக்கு உறுதி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். மோர்பி விபத்து காரணமாக, தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Gujarat