Home /News /national /

Rahul Gandhi : 'கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் பிரதமரையும் காணவில்லை' - ராகுல் காந்தி விமர்சனம்

Rahul Gandhi : 'கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் பிரதமரையும் காணவில்லை' - ராகுல் காந்தி விமர்சனம்

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

மக்களுக்கு எஞ்சியிருப்பது எல்லாம் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி மற்றும் இங்கும் அங்குமாக உள்ள பிரதமரின் படங்கள் தான் என்று விமர்சித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உபகரணங்களுடன் சேர்ந்து நாட்டின் பிரதமரையும் காணவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

  மத்திய அரசின் கொரோனா பரவல் தடுப்பு பணிகளை தொடர்ந்து சாடிவரும் ராகுல் காந்தி, தற்போது டிவிட்டரில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதில், தடுப்பூசி, ஆக்ஸிஜனுடன் சேர்த்து பிரதமர் மோடியையும் காணவில்லை என்றும், மக்களுக்கு எஞ்சியிருப்பது எல்லாம் புதிய நாடாளுமன்றக் கட்டடம், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி மற்றும் இங்கும் அங்குமாக உள்ள பிரதமரின் படங்கள் தான் என்று விமர்சித்துள்ளார்.

  இன்னும் எவ்வளவு காலம் தான் மக்கள் மத்திய அரசின் கொடுமையைத் தாங்குவது என்று கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி, இதற்கு பொறுப்பானவர்கள் எங்கோ மறைந்திருக்கிறார்கள் எனவும் சாடியுள்ளார்.

  கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 6 முதல் 8 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அவசியம் என ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்துள்ளது. பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

  ALSO READ : சுவாசப் பயிற்சிகள் செய்து ஒரு நுரையீரலுடன் கொரோனாவை வென்ற செவிலியர்: தன்னம்பிக்கை நாயகி!

  நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பாதிப்பு உச்சத்தில் இருப்பதால், பல்வேறு மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 781 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு, 920 பேர் உயிரிழந்தனர்.

  இந்நிலையில் அங்கு ஜூன் 1ம் தேதி காலை 7 மணி வரை, கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு அலுவலகங்களிலும் 15 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி, திருமண நிகழ்ச்சிகளை இரண்டு மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்றும், மீறினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  பீகாரில் மே 25ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். வரும் 15ம் தேதியுடன் அங்கு பொதுமுடக்கம் நிறைவடைய இருந்த நிலையில், மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள், வென்டிலேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  ALSO READ :  உ.பி.யில் தொடரும் அதிர்ச்சி: மீண்டும் கங்கை நதிக்கரையில் ஒதுங்கிய உடல்கள்; உன்னாவில் மண்ணில் புதைக்கப்பட்ட சில உடல்கள்

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 27ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால், ஆளுநர் மாளிகை, முதல்வர் அலுவலகம் மற்றும் புதிய சட்டப்பேரவை கட்டுமான பணிகளை சத்தீஸ்கர் மாநில அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

  ஜூன் 27ம் தேதி நடைபெறவிருந்த யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு, அக்டோபர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் ஜூன் 21ம் தேதி தொடங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, அம்மாநில பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  ALSO READ : கொரோனாவைக் கட்டுப்படுத்த தயவு செய்து செயல்படுங்கள்: எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு வைத்த 9 அம்ச கோரிக்கைகள் என்ன?

  தெலங்கானா மாநிலத்தில் புதன்கிழமை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஹைதராபாத் சார்மினார் சந்தையில், ரம்ஜானை முன்னிட்டு பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Narendra Modi, PM Modi, Rahul gandhi

  அடுத்த செய்தி