PM Kisan: விவசாயிகளே உதவித்தொகை கிடைக்கவில்லையா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்

மாதிரி படம்

இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

  • Share this:
நாடு முழுவதும் இருக்கும் நலிவடைந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு, பி.எம் கிசான் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. பி.எம். கிசான் திட்டத்தில் உதவித்தொகை கிடைக்க வேண்டும் என்றால், விவசாயிகள் முதலில் கிசான் திட்டத்தில் இணைய வேண்டும்.

2 ஹெக்டேருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். நில ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட மற்ற ஆவணங்களையும் எடுத்துச் சென்று உள்ளூரில் இருக்கும் வேளாண்மை அலுவலகத்தில், கிசான் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய ஆவணங்கள் ஆன்லைனில் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் பதிவேற்றம் செய்யப்படும். வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும். நீங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவதற்கு தகுந்த நபரா? உங்கள் ஆவணங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் நீங்கள் ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

விவசாயிகள் சிலருக்கு கிசான் திட்டத்துக்கு உரிய ஆவணங்கள் முறையாக ஒப்படைத்த பிறகும் மத்திய அரசின் உதவித்தொகை கிடைக்கவில்லை. தங்களுக்கு ஏன் பணம் கிடைக்கவில்லை என்ற சந்தேகம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுள் ஒருவர் நீங்கள் என்றால், பணம் கிடைக்கவில்லை என கவலைப்பட வேண்டாம். நீங்கள் சமர்பித்த ஆவணங்களில் பிழை ஏதும் இருக்க வாய்ப்புகள் உள்ளன. முகவரி, வங்கிக் கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி எண், பெயர்களில் மாற்றம் என ஏதேனும் ஒன்றில் பிழை இருந்தால்கூட உங்களுக்கான பணம் கிடைக்காது.

பிழையை திருத்துவது எப்படி?

pmkisan.gov.in. என்ற ஆன்லைன் தளத்துக்கு செல்லுங்கள். அங்கு இருக்கும் விவசாயிகள் பக்கம் (farmer's corner) கிளிக் செய்தபிறகு பயனாளர் நிலவரம் (beneficiary status) என்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அந்தப் பக்கத்தில் நுழைந்தவுடன் ஆதார் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், மொபைல் எண் ஆகிவை இருக்கும். பதிவேற்றப்பட்ட உங்களுடைய தகவல்கள் சரியாக இருக்கிறதா? என்பதை பொறுமையாக மேற்பார்வையிடுங்கள். ஏதேனும் தவறுகள் இருந்தால் அல்லது ஆவணங்கள் பதிவேற்றப்படாமல் இருந்தால், அதனை பதிவேற்றுங்கள். இதனை நீங்கள் செய்தவுடன் உங்களுக்கான கிசான் தொகை கிடைக்கும்.

Also read... National Statistics Day 2021: தேசிய புள்ளியல் நாள் 2021 - முக்கியத்துவமும், பின்னணியும்!

விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் யார்?

2 ஹெக்டேருக்கு அதிகமான விவசாய நிலங்கள் வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். யாரெல்லாம் பயன்பெற முடியாது என்ற விவரத்தையும் மத்திய அரசு கொடுத்துள்ளது. நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் வைத்திருப்பவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் அரசுதுறை பதவி வகித்தவர்கள். முன்னாள், இந்நாள் மாநில மற்றும் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள், இருப்பவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநகராட்சி மேயராக இருந்தவர்கள், கிராம பஞ்சாயத்து ஒன்றிய சேர்மேனாக இருப்பவர்கள் பயன்பெற முடியாது.

மத்திய மாநில அரசுப் பணிகளில் பணியாற்றுவபர்கள், இப்போதும் பணியில் இருப்பவர்கள் ( குரூப் 4 மற்றும் டி பணியாளர்களுக்கு விலக்கு), மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பதிவுபெற்ற மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: