விவசாயிகளுக்கான பிரதமரின் கிஷான் திட்டத்தில் 5 முக்கிய மாற்றங்கள்!

கோப்புப் படம்

பிரதமர் கிஷான் திட்டத்தில் இணைந்து ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் திட்டத்தால் பலன் பெற முடியாது

  • Share this:
    விவசாயிகளுக்கான பிரதமரின் கிஷான் திட்டத்தில் ஐந்து முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    நாட்டின் முதுகெழும்பாக கருதப்படும் விவசாயம் கருதப்பட்டு வருகிறது. இத்தகைய விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலன் அளிக்கும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு பிரதமர் கிசான் யோஜனா  தொடங்கப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில்  நான்கு மாத இடைவெளியில் தலா 2000 ரூபாய் என ஆண்டுக்கு 6000 ரூபாய் செலுத்தப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2018-19 ஆண்டில் இந்த திட்டத்துக்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் மேற்கொண்டு 2 கோடி விவசாயிகள் பலனடையும் வகையில் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.  தற்போது இந்த திட்டத்தின் கீழ் 12 கோடி விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.  இந்நிலையில், இந்த திட்டத்தில் மேலும் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

    2 ஹெக்டேருக்கு குறைவான சாகுபடி நிலம் கொண்ட விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தால் பலன் அடைய முடியும் என்று விதியிருந்தது. தற்போது இந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோகச் சட்டம் தேவையா? - உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி..


    பிரதமர் கிஷான் திட்டத்தில் இணைந்து ஒருவர் பயன்பெற வேண்டும் என்றால் ஆதார் அட்டை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் இல்லையென்றால் திட்டத்தால் பலன் பெற முடியாது.

    ஆதார் அட்டை, மொபைல் எண், வங்கி கணக்கு எண் மற்றும் நில விவரங்களை வைத்து  pmkisan.nic.in என்றஇணையதள பக்கம் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பித்து திட்டத்தில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களுக்கான தவணைத் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுவிட்டதாக என்பதை வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சரிபார்க்கலாம்.  இதற்கான ஆன்லைன் போர்ட்டலில் ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தவணை குறித்து அறிந்துகொள்ளலாம்.

    இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% ஆக உயர்வு!

    விவசாயிகளுக்கான கிஷான் கிரெடிட் கார்டு,  பிரதமரின் கிஷான் திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.   கிஷான் கிரெடிட் கார்டு மூலம் 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்
    Published by:Murugesh M
    First published: