• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிஎம் கிசான் 10-வது தவணை.. விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் என தகவல்!

பிஎம் கிசான் 10-வது தவணை.. விவசாயிகளுக்கு வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் என தகவல்!

PM Kisan

PM Kisan

பிஎம் கிசான் திட்டத்தில் இணைந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் செய்யப்படும் என்று தகவல்

  • Share this:
நலிவுற்ற நிலையில் இருக்கும் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 10-வது தவணை நிதியை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அநேகமாக டிசம்பர் 15-ஆம் தேதி இந்த பத்தாம் தவணை வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஒரு தவணைக்கு தலா ரூ.2,000 வழங்கப்பட்டு வரும் நிலையில், 9ம் தவணையில் நிதியுதவி கிடைக்காதவர்கள் அதே போல கடந்த செப்டம்பர் 30-க்குள் இந்த திட்டத்தில் இணைந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரும் டிசம்பரில் ரூ.2,000-த்திற்கு பதில் ரூ.4,000 டெபாசிட் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

PM-KISAN-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் முன்பே ரிஜிஸ்டர் செய்த விவசாயிகள் இந்த 10ம் தவணைக்கு தகுதியுடையவர்கள் ஆவர். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த சிறு மற்றும் குறு விவசாயிகள், பயிரிட கூடிய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். 2019-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயல்பாட்டிற்கு வந்த இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் 3 தவணைகளாக விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

Also read:  பாஜக ஆதரவுடன் துணை சபாநாயகராகும் சமாஜ்வாதி எம்.எல்.ஏ – பாஜக ஆடும் சதுரங்கம்!

இதனை இரட்டிப்பாக்கவும் (அதாவது ஒரு நிதியாண்டிற்கு ரூ.12,000 தவணைக்கு ரூ.4,000) மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நாட்டின் முன்னணி ஊடகங்கங்கள் தகவல் தெரிவித்து இருக்கின்றன. PM-KISAN நிதி திட்டத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை 11.37 கோடி விவசாயிகள் சுமார் ரூ.1.58 லட்சம் கோடி நிதி உதவி பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் தங்களை இணைத்து கொண்ட விவசாயிகள், பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி பயனாளியின் ஸ்டேட்டஸ் விவரங்களை ஆன்லைனில் சரி பார்க்கலாம்.

பயனாளிகளின் நிலையை (Beneficiary Status) செக் செய்வது எப்படி :

* PM Kisan-ன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு ( https://pmkisan.gov.in/ ) செல்ல வேண்டும்.

* வெப்சைட்டின் வலது பக்கம் இருக்கும் Farmers Corner என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும்.

* அங்கே காணப்படும் பயனாளிகளின் ஸ்டேட்டஸை செக் செய்வதற்கு கொடுக்கப்பட்டு உள்ள Beneficiaries Status என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

Also read:   ’போலீஸ்’ நண்பருடன் கள்ளக்காதல்… வாழ்க்கையை தொலைத்த இளம்பெண்

* அல்லது தனது கிரெடிட் விவரங்களை செக் செய்ய நினைப்போர் https://pmkisan.gov.in/BeneficiaryStatus.aspx என்ற லிங்கை நேரடியாக பயன்படுத்தலாம். இந்த லிங்கில் Beneficiary Status என்பதன் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் நம்பர், அக்கவுண்ட் நம்பர், மொபைல் நம்பர் ஆகிய மூன்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தி Get Data-வை க்ளிக் செய்வதன் மூலம் பயனாளிகள் தங்கள் கிரெடிட் விவரங்களைச் சரி பார்க்கலாம்.

டேட்டாவை பெறும் பயனாளிகள் தங்கள் அக்கவுண்ட்டில் கடைசி தவணை எப்போது வந்தது மற்றும் எந்த வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது தவிர 8 மற்றும் 9-வது தவணைகள் தொடர்பான தகவல்களையும் இங்கே பெறுவார்கள். "FTO is generated and Payment confirmation is pending" என்று ஸ்டேட்டஸ் வந்தால் பயனாளரின் நிதி ப்ராசஸில் இருக்கிறது என்று அர்த்தம்.

Also read:   சமோசாவுக்காக அடிதடியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் – வீடியோ!

இந்த திட்டத்தில் இதுவரை இணையாத தகுதி உடைய விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு, ,விவசாய நிலத்தின் ஆவணங்கள், முகவரி சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, தங்களது பண்ணை தகவல் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி இணையலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: