தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதன்மூலம் மிகப்பெரும் பேரழிவை தடுத்த பாதுகாப்புப் படையினர் - பிரதமர் மோடி பாராட்டு

மிகப்பெரும் பேரழிவை பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், தங்களது வீரத்தை பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்

தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றதன்மூலம் மிகப்பெரும் பேரழிவை தடுத்த பாதுகாப்புப் படையினர் - பிரதமர் மோடி பாராட்டு
பிரதமர் மோடி
  • News18
  • Last Updated: November 21, 2020, 7:04 AM IST
  • Share this:
காஷ்மீரில் தீவிரவாதிகள் 4 பேரை சுட்டுக் கொன்றதன் மூலம், மிகப்பெரும் பேரழிவை பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நக்ரோட்டா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை அதிகாலை கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

3 மணிநேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பெருமளவிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மும்பைத் தாக்குதல் சம்பவத்தின் நினைவு தினம் 26-ம் தேதி வர உள்ள நிலையில், மிகப்பெரும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.


இதையடுத்து, நாட்டின் பாதுகாப்பு நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார். இதில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்த்தன் சிறிங்லா, உளவுத் துறை உயர்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Also read... கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் - யுஜிசி உத்தரவுஇதையடுத்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 4 பேரை சுட்டுக் கொன்றதுடன், ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததன் மூலம், மிகப்பெரும் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மிகப்பெரும் பேரழிவை பாதுகாப்புப் படையினர் தடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், தங்களது வீரத்தை பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்
First published: November 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading