முகப்பு /செய்தி /இந்தியா / “முதல் பந்திலேயே அவுட்டாக்க பார்க்கிறார்..” மதுரை மாணவி கேள்விக்கு பிரதமரின் கலகல பதில்..!

“முதல் பந்திலேயே அவுட்டாக்க பார்க்கிறார்..” மதுரை மாணவி கேள்விக்கு பிரதமரின் கலகல பதில்..!

பிரதமர் கலகல பதில்

பிரதமர் கலகல பதில்

தேர்வின் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு சமாளிப்பது என்று மதுரை மாணவி எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகள் எழுதும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர், ஆசிரியர்களுடன் 2018 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் டெல்லியில் உள்ள தல்கதோரா அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 38 லட்சம் பேர் காணொலி காட்சி வழியாக பங்கேற்றனர்.

இதில், பொதுத் தேர்வுகள் மற்றும் நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் பதற்றம் இன்றி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற உத்தியை, பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் ஒரே மாணவியாக மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயாவில் படிக்கும் அனிதா என்ற மாணவி, பிரதமர் மோடியிடம், மாணவர்கள் மீதான பெற்றோர்களின் எதிர்பார்ப்பை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, முதல் பந்திலேயே என்னை அவுட் ஆக்கப் பார்க்கிறார் அஷ்வினி என நகைச்சுவையாக தனது பதிலைத் தொடங்கினார். கிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பார்வையாளர்கள் சிக்ஸர் அடிக்க வேண்டும் என கூச்சலிடுவார்கள், ஆனால் களத்தில் நிற்கும் அதை கண்டுகொள்ளாமல் பந்தில் கவனம் செலுத்துவார். அதேபோல மாணவர்கள் பெற்றோர் மற்றும் சுற்றியிருப்பவர்களின் கருத்துகளை ஊக்கமாக தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, தடைகளாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறினார்.

First published:

Tags: PM Modi, School student