கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி

கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறமுடியாத குழந்தைகளுக்கு அதற்கு நிகரான கல்வி உதவித்தொகை வழங்கப்படும்

 • Share this:
  கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

  கொரோனாவின் இரண்டாவது அலையில் ஏராளமான குழந்தைகள் தங்கள் இரு பெற்றோரையும் இழந்து ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அத்தகைய குழந்தைகளுக்கு சில மாநில அரசுகள் நிதியுதவியை அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடியும் நிவாரண உதவி அறிவித்துள்ளார். அதன்படி கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின் சிறார்களுக்கான பிஎம் கேர்ஸ் நிதித்தொகுப்பில் இருந்துமாதந்தோறும் நிதியதவி வழங்கப்படும் என்றும், 23 வயதானதும் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

  மேலும் வீட்டுக்கு அருகில் உள்ள கேந்த்ரி. வித்யாலயா பள்ளி அல்லது தனியார் பள்ளியில் சேர்ந்து பயிலலாம் என்றும் தனியார் பள்ளியில் பயில்பவர்களாக இருந்தால் கல்வி உரிமை சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப பிஎம் கேர்ஸ் தொகுப்பில் இருந்து கட்டணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதவிர 11 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தால் மத்திய அரசு நடத்தும் சைனிக், நவோதய உள்ளிட்ட பள்ளிகளிலும் சேர்க்கை அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி வகுப்புகளில் சேருவதற்கான கல்விக்கடன் பெற

  மத்திய அரசு உதவும் என்றும் அதற்கான வட்டி பிஎம்-கேர்ஸ்-ல் இருந்து செலுத்தப்படும் என்றும் மோடி தெரிவித்துள்ளார். கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறமுடியாத குழந்தைகளுக்கு அதற்கு நிகரான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகைகள் காப்பாளர் உதவியுடனோ அல்லது உறவினர்கள் தயவில் வாழும் குழந்தைகளுக்கும் பொருந்தும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: