• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பிஎம் கேர்ஸ் நிதி மீது முறைகேடு புகார் கூறிய எதிர்கட்சிகள் செய்த விநோதம்!

பிஎம் கேர்ஸ் நிதி மீது முறைகேடு புகார் கூறிய எதிர்கட்சிகள் செய்த விநோதம்!

PM Cares

PM Cares

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

  • Share this:
பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மீது எதிர்கட்சிகள் தொடர்ந்து முறைகேடு புகார் கூறி அதனை டார்க்கெட் செய்வதை எதிர்கட்சிகள் வழக்கமாக கொண்டிருக்கும் நேரத்தில், பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை, எதிர்கட்சி பிரமுகர்கள் ஆரவாரமாக திறந்து வைத்திருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.

பிரதமர் மோடி நாடு முழுவதும் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மூலம் புதிதாக கட்டமைக்கப்பட்ட 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைப்பதற்கு ஒரு நாள் முன்னதாகவே எதிர்கட்சியினர் அவற்றை போட்டி போட்டுக்கொண்டு திறந்து வைத்திருக்கின்றனர்.

பிஎம் கேர்ஸ் நிதியம்:

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நேரத்தில் அதனை கையாளுவதற்காக பிரத்யேகமாக பிரதமர் கவனிப்பு நிதி (பிஎம் கேர்ஸ்) என்ற ஒன்றை பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிதியத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களும், தனி நபர்களும் நன்கொடைகளை அளித்தனர். பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மூலம் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் 1224 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க உத்தரவிடப்பட்ட நிலையில் 1100க்கும் மேற்பட்ட நிலையங்களில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இதனிடையே இன்று தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Also Read: இந்தியாவில் அறிமுகமாகும் அமெரிக்க புகழ் 7-Eleven சங்கிலித்தொடர் கடைகள் – என்ன ஸ்பெஷல்?

பிஎம் கேர்ஸ் நிதி மூலம் முறைகேடு நடைபெறுவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்கி வைப்பதற்கு ஒரு நாள் முன்னரே எதிர்கட்சிகள் ஆளும் டெல்லி, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்கி வைத்திருப்பது தெரியவந்திருக்கிறது.

பிரதமர் மோடி


 

புதிதாக கட்டமைக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிஎம் கேர்ஸ் நிதியத்தின் மூலம் அமைத்துவிட்டு, பிஎம் கேர்ஸினால் தான் இவை அமைக்கப்பட்டன என்பதை கூறாமல் எதிர்கட்சிகள் தாங்களே அதற்காக சொந்தம் கொண்டாடிக் கொண்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

அக்டோபர் 6ம் தேதி, டெல்லியில் பல்வேறு அமைச்சர்கள் மாநிலம் முழுவதும் 27 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை திறந்து வைத்திருக்கின்றனர், ஆனால் இவற்றில் 14 நிலையங்கள் பிஎம் கேர்ஸ் நிதியத்தால் கட்டமைக்கப்பட்டவை. டெல்லி அரசு கொடுத்திருந்த விளம்பரங்கள் எவற்றிலுமே இவை பிஎம் கேர்ஸ் நிதியில் கட்டமைக்கப்பட்டவை என குறிப்பிடப்படவில்லை.

Also Read:   ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் முதல் 100 கோடீஸ்வரர்களின் பட்டியல்.. டாப் 10-ல் யார் யார்?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், சுகாதாரத்துறை அமைச்சருடன் இணைந்து பிஎம் கேர்ஸ் நிதியத்தால் கட்டமைக்கப்பட்ட 27 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை கட்டமைத்தார். ஆனால் கொடுக்கப்பட்டிருந்த விளம்பரங்களில் இந்நிலையங்கள் பிஎம் கேர்ஸ் நிதியால் கட்டமைக்கப்பட்டவை என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் பிரதமர் இன்று ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வை ஜார்க்கண்ட் அரசு வேண்டுமென்றே புறக்கணித்து ஒரு நாள் முன்னதாகவே அந்த நிகழ்ச்சியை நடத்தியிருப்பதாக அம்மாநில பாஜக தலைவர் கூறியுள்ளார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: