ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேளாண் விளைச்சலை அதிகரிக்க தொழில்நுட்பங்களை கொண்டுவர வேண்டும்- CSIR கூட்டத்தில் மோடி வேண்டுகோள்

வேளாண் விளைச்சலை அதிகரிக்க தொழில்நுட்பங்களை கொண்டுவர வேண்டும்- CSIR கூட்டத்தில் மோடி வேண்டுகோள்

CSIR கூட்டத்தில் மோடி

CSIR கூட்டத்தில் மோடி

சிஎஸ்ஐஆர் 100 ஆண்டுகள் நிறைவடையும் 2042க்கான தொலைநோக்குப் பார்வையை உருவாக்க வலியுறுத்தினார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai |

தானியங்களில் புரதச் சத்தை அதிகரிப்பதற்கும், புதிய தானிய ரகங்களில் விளைச்சலை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து அதிகரிப்பதற்கும் தொழில்நுட்பத் தீர்வுகளைக் கொண்டு வர வேண்டும் என்று விஞ்ஞான சமூகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுதில்லியில் நேற்று நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) சங்கத்தின் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய மோடி இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கவும், பசுமை ஆற்றலை மையமாகக் கொண்டு ஆற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய அணுகுமுறைகளை கண்டுபிடிக்கவும் விஞ்ஞான சமூகத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

சிஎஸ்ஐஆர் தலைவராக இருக்கும் பிரதமர், கடந்த 80 ஆண்டுகளில் கவுன்சிலின் முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் சிஎஸ்ஐஆர் 100 ஆண்டுகள் நிறைவடையும் 2042க்கான தொலைநோக்குப் பார்வையை உருவாக்க வலியுறுத்தினார்.

கேரள ஆளுநர் பேஸ்புக் கணக்கு முடக்கம்.. கேரளாவில் மர்ம நபர்கள் கைவரிசை

தொழில்நுட்பம் சாமானியர்களைச் சென்றடைய, அறிவியல், வணிக மற்றும் சமூகக் கூறுகளின் ஒருங்கிணைந்த அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்தகைய மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் மூலம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிக்க உதவும் வகையில், ஒரு ஆய்வக அணுகுமுறையை கடைப்பிடிக்குமாறு மோடி கேட்டுக் கொண்டார்.

அனைத்து ஆய்வகங்களின் மெய்நிகர் உச்சி மாநாட்டை தவறாமல் நடத்தலாம். அதில் அவர்கள் ஒருவருக்கொருவர் அனுபவங்களிலிருந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பிரபல விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் அறிவியல் மற்றும் பிற அமைச்சகங்களின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Millets, PM Narendra Modi