முகப்பு /செய்தி /இந்தியா / 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும் - பிரதமர் மோடி பேச்சு

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும் - பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

PM Narendra Modi | பொதுமக்கள் சந்திக்கும் 10 பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும் என பிரதமர் மோடி பெருமிதம்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற தொழில்நுட்ப பயன்பாடு உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கருத்தரங்கில் காணொலி காட்சி வழியாக பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சிறிய தொழில்களை மேற்கொள்வதில் இருக்கும் தேவையற்ற செலவுகளைக் குறைக்க அரசு முனைப்பு காட்டுவதாக கூறினார்.

என்னென்ன செலவுகளை குறைக்க முடியும் என்பது தொடர்பான பட்டியலை அளிக்குமாறு தொழில்துறையை தாங்கள் கேட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுவதை உறுதி செய்யும் நோக்கில், நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் கூறினார்.

முக அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு, வரி செலுத்துவதற்கான தொழில்நுட்பத்தை தற்போது பயன்படுத்தி வருவதாகவும், இதன்மூலம், வரி செலுத்துவோர் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது போல பல்வேறு வகைகளில், குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறினார். 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்து தற்போது அதிகம் பேசப்படுவதாகவும், மருத்துவம், கல்வி, விவசாயம் உள்பட பல்வேறு துறைகளில் இந்த தொழில்நுட்பம் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பொதுமக்கள் சந்திக்கும் 10 பிரச்சினைகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்றும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை சாத்தியப்படுத்தியது தொழில்நுட்பம்தான்  என்றும் ஜன்தன் எனும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம், ஆதார், மொபைல் எண் ஆகியவை ஏழைகளுக்கு நன்மைகளை வழங்கும் மும்மூர்த்திகளாக உள்ளன என்றும் பிரதமர் மோடி கூறினார். இதனால், 21 ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது என்றும் அவற்றை இணைய தொழில்நுட்பம், டிஜிட்டல் மட்டும் தான் என்ற அளவில் சுருக்கிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: PM Modi, Union Budget 2023