இந்தியில் கேள்வி கேட்ட வழக்கறிஞர்... நீதிமன்றத்தில் கொந்தளித்த சுப்பிரமணியன் சுவாமி...!

சுப்ரமணிய சுவாமி

 • News18
 • Last Updated :
 • Share this:
  நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்கறிஞர் இந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் தமிழன், ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று பதிலளித்தார்.

  முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் அவர்களுக்கு முறைகேடாக சொத்து இருப்பதாக புகார் எழுந்தது. அவர்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி இருப்பதாக புகார் கூறப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

  அதன்படி 2011, 2012-ம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012-ல் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி கூடுதல் மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  இந்த வழக்கில் இன்று சுப்பிரமணியன் சுவாமியை, சோனியா மற்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் ஆர்.எஸ் சீமா குறுக்கு விசாரணை செய்தார். நீதிபதி சமர் விஷால் முன்னிலையில், வழக்கு தொடர்பாக பல கேள்விகளை சீமா, சுப்பிரமணியன் சுவாமியிடம் எழுப்பினார்.

  வழக்கு விசாரணையின் போது சீமா, இந்தியில் பேசினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலமே” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி விஷால், “இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நீதிமன்றத்தின் மொழிதான்; இந்தி தேசிய மொழி” என்றார்.

  இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுவாமி, “தயது செய்து ஆங்கிலத்தில் பேசுங்கள்; நான் தமிழன்” என்றார்.

  இதனை அடுத்து, சீமா ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்வுகளால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  இந்தி தேசிய மொழியா?

  இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டுமே என்று குஜராத் நீதிமன்றம் ஜனவரி 2010-ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. மத்திய அரசு 2009-ம் ஆண்டு வெளியிட்ட ஒரு பதிலில், இந்தியாவுக்கென தேசிய மொழியென்று எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  மத்திய அரசின் பதில்


  Also See...

   

  Published by:Sankar
  First published: