Home /News /national /

கொரோனா அவலம்: மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

கொரோனா அவலம்: மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!

சி.டி ஸ்கேன் செய்வதற்காக அவரை பரிசோதனை மையத்திற்கு கூட்டிச் சென்றனர். பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்காக காத்திருந்த போது அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இந்தியாவில் பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை மரணம், உதவிக்காக அலைவது, விரக்தி மற்றும் உதவியற்ற தன்மை என பல மோசமான நிகழ்வுகளின் வீடியோக்களை நம் கண் முன்னே காட்டி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களுடன் நீண்ட வரிசையில் எரியூட்டுவதற்காக உறவினர்கள் காத்திருப்பது, மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல் வெளியிலேயே சிகிச்சை பெறுவது, கார்களில் காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களுடன் ஆக்ஸிஜனை நிரப்புவதற்காக காத்திருக்கும் மக்கள் கூட்டம் என சமூக வலைத்தளங்களில் உலவி வரும் வீடியோக்களை பார்க்கும் போது ஒரு போர் சூழல் போன்ற நிலையை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறது.

தினந்தோறும் இது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் புதிது புதிதாக பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பெற்றோர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தின் பெரிய மருத்துவமனையான கிங் ஜார்ஜிற்கு ஆம்புலன்ஸில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது ஒன்றரை வயது மகளான சரிதாவை அழைத்து வந்தனர் அவரது பெற்றோர். தந்தை வீரபாபு மகளுக்கு மூச்சு விட சிரமம் ஏற்பட்டதால் ஆக்ஸிஜன் பம்பை தொடர்ந்து அழுத்திக் கொண்டிருந்தார். இதனிடையே மருத்துவமனையில் அனுமதி கிடைக்காமல் சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர். அக்குழந்தையின் நிலையை பார்த்த அவருடைய தாய் தொடர்ந்து அழுது கொண்டிருந்தார். என்னுடைய குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என அந்த தாய் மன்றாடி கெஞ்சி அழுதது அங்கிருந்தோரை கலங்கச் செய்வதாக இருந்தது. இதனிடையே சிறிது நேரத்திலேயே அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மருத்துவமனை நிர்வாகத்தினரின் அலட்சியம் காரணமாகவே தங்களின் குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோரும், அவரின் உறவினர்களும் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே மருத்துவமனை நிர்வாகத்தினர் அளித்த விளக்கத்தில் குழந்தையை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்தனர். மாலை 3.30 மணியளவில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், குழந்தை கொண்டுவரப்பட்ட போதே மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் பலசா எனும் பகுதியில் இதேபோன்றதொரு பதைபதைக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

செஞ்சு பழங்குடியின பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை அடுத்து நீலாமணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சி.டி ஸ்கேன் செய்வதற்காக அவரை ஸ்ரீ கிருஷ்ணா மையத்திற்கு கூட்டிச் சென்றனர். பரிசோதனை அறிக்கை கிடைப்பதற்காக காத்திருந்த போது அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ் இல்லாமல் பைக்கிலேயே தாயின் உடலைக் கொண்டு சென்ற மகன்: டெஸ்ட் ரிப்போர்ட் வருவதற்குள் இறந்த பெண்

இதனையடுத்து இறந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்வதென அவரது மகன் முடிவெடுத்தார். மகனும், மருமகனும் அமர்ந்து கொள்ள நடுவில் இறந்த தாயின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே செல்லும் வழியில் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்திய போதிலும் அவரும் வாகனம் எதையும் ஏற்பாடு செய்து தரவில்லை. உயிரிழந்த தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் மகன் எடுத்துச் சென்றது காண்போரை கலங்கச் செய்வதாக அமைந்தது.
Published by:Arun
First published:

Tags: Andhra Pradesh, Corona, COVID-19 Second Wave

அடுத்த செய்தி