சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்களில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீர்ரகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவோயிஸ்ட்களின் தலைவனை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களை சுற்றி வளைத்த மாவோயிஸ்டகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டிருந்த சில வீரர்களை காணவில்லை என்றும் அவர்களை மாவோயிஸ்ட்கள் கடத்தி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீரை சேர்ந்த கோப்ரா படை வீரரான ராக்கேஷ்வர் சிங் மன்ஹாஸ் மாவோயிஸ்களின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாவோயிஸ்ட்கள் தாக்குதல் குறித்து செய்திகள் வாயிலாகத்தான் தெரிந்துக்கொண்டோம். சிஆர்பிஃப் அல்லது அரசாங்கம் மூலம் இந்ததகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை என அவரது மனைவி மீனு குற்றஞ்சாட்டியுள்ளார். எனது கணவர் ராக்கேஷ்வர் சிங் மன்ஹாஸ் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டுக்காக சேவையாற்றி வருகிறார். அவர் எங்களிடம் திரும்பி வருவதை இந்த அரசாங்கம்தான் உறுதி செய்யவேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு கடைசியாக எனது கணவரிடம் பேசினேன். எனக்கு ஒரு போன் வந்தது சத்தீஸ்கரில் இருந்து ரிப்போர்டர் பேசுவதாகவும் எனது கணவரின் புகைப்படம் கேட்டு போன் செய்தார்.
மாவோயிஸ்ட்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து அவரது போட்டோவை அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். 2011-ல் என் கணவர் சிஆர்பிஃஎப் பணியில் சேர்ந்தார். அசாமில்தான் பணியாற்றி வந்தார் மூன்று மாதத்துக்கு முன்புதான் அவர் சத்தீஸ்கருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். சிஆர்பிஃஎப் அனுகியபோது இப்போது எதுவும் உங்களிடம் கூற முடியாது, முறையான தகவல் வந்த பின்னர் உங்களை அழைக்கிறோம் என்றனர். ப்ளீஸ் என்னுடைய தந்தையை விட்டுவிடுங்கள் என அவரது 5 வயது மகள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘மாவோயிஸ்ட்கள் அவரை பிணைக்கைதியாக வைத்திருப்பது தொடர்பாக எங்களுக்கு எந்தத்தகவலும் இல்லை. காணாமல் போன வீரர்களை தேடும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். சமூகவலைத்தளங்கள் மூலம்தான் அந்த வீரர் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டதை அறிந்தோம். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. அந்த தகவலின் உண்மையை சரிபார்த்து அவரை திரும்ப பெற தேவையான நடவடிக்கையை எடுப்போம்’ என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.