”எந்த ஒரு உத்தரவையும் இப்போது கூற விரும்பவில்லை” - சபரிமலை வழக்கில் தலைமை நீதிபதி

Sabarimala Case |

”எந்த ஒரு உத்தரவையும் இப்போது கூற விரும்பவில்லை” - சபரிமலை வழக்கில் தலைமை நீதிபதி
கோப்புப்படம் (சபரிமலை)
  • News18
  • Last Updated: December 13, 2019, 1:00 PM IST
  • Share this:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில் எந்த ஒரு உத்தரவையோ, கருத்தையோ இந்த மனு மீது கூற விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று கடந்த மாதம் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு உத்தரவிட்டது.

எனினும், கோயிலுக்கு பெண்கள் செல்ல தடை எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால், கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கூறிய கேரள அரசு, உச்ச நீதிமன்றத்தில் சென்று அனுமதி பெற்று வந்தால் பாதுகாப்பு வழங்குவோம் என்று விளக்கம் அளித்தது.


இந்த நிலையில், சபரிமலை கோவிலுக்குள் செல்ல பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பிந்து அம்மிணி தொடர்ந்த வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்தது. 2018-ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதியானது அல்ல; 7 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் வரை அனைவரும் காத்திருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

மேலும், ரஹானா பாத்திமா மற்றும் பிந்து அம்மிணிக்கு பொதுவான பாதுகாப்பு வழங்கப்படும். மற்றபடி இந்த மனு மீது எந்த ஒரு உத்தரவையோ, கருத்தையோ இப்போது கூற விரும்பவில்லை என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading