Home /News /national /

மத்திய தரைக் கடலில் வீசப்பட்டும் பிளாஸ்டிக்குகள் 2040-ல் இரட்டிப்பாகும் - IUCN வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

மத்திய தரைக் கடலில் வீசப்பட்டும் பிளாஸ்டிக்குகள் 2040-ல் இரட்டிப்பாகும் - IUCN வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

பிளாஸ்டிக் குப்பை
 (கோப்பு  படம் )

பிளாஸ்டிக் குப்பை (கோப்பு படம் )

உணவகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஸ்ட்ரா அவசியம் என்றால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி ஸ்ட்ராக்களை வாங்கவும். கடைக்கு செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்தவும். ஒரு பிளாஸ்டிக் பை அழிவதற்கு 1,000 ஆண்டுகள் ஆகலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.

மேலும் படிக்கவும் ...
துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பிளாஸ்டிக்குகளை கடலில் கொட்டுவது தடுக்கப்படாவிடில் 2040-க்குள் இரு மடங்காக அதிகரிக்கும் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (இன்டர்நேஷனல் யூனியன் பார் தி கன்சர்வேஷன் ஆஃப் நேச்சர் ) தெரிவித்துள்ளது.

பிளாஸ்டிக்கின் கூறுகளாக இருக்கும் நச்சுகளில் டைதிலெக்சைல் பித்தலேட் உள்ளது. அத்துடன் ஈயம், காட்மியம் மற்றும் பாதரசம் ஆகியவையும் உள்ளது. இவை புற்றுநோயை உண்டு பண்ணும் காரணிகளாக உள்ளது.  உணவுச் சங்கிலி மூலம் இறுதியில் மீன் , விலங்குகள் மூலம் மனித இனம் இந்த ரசாயனங்களை உட்கொள்கின்றன.

இதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு மனித
இனம் மிகப்பெரும் சிக்கலுக்குள் செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 230,000 டன் பிளாஸ்டிக்குகள் மத்தியதரைக் கடலில் கொட்டப்படுகிறது. எகிப்து, இத்தாலி மற்றும் துருக்கி ஆகியவை கடலுக்குள் அதிக பிளாஸ்டிக்கை கொட்டும் நாடுகளாகும். இதற்கு அதிக மக்கள் தொகை கொண்ட கடலோரப் பகுதிகள் மற்றும் தவறாக நிர்வகிக்கப்பட்ட கழிவுகள் முக்கிய காரணம் என்று
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN ) கண்டறிந்துள்ளது.மாண்டினீக்ரோ, அல்பேனியா, போஸ்னியா, ஹெர்சகோவினா மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகியவை மத்திய தரைக்கடலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் கொண்டிருக்கின்றன.
"Mare Plasticum" "The Mediterranean&quot" என்று அழைக்கப்படும் இந்த அறிக்கை, மத்தியதரைக் கடலில் ஏற்கனவே ஒரு மில்லியன் டன் பிளாஸ்டிக் குவிந்துள்ளது என்று மதிப்பிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட கப்பல் கொள்கலன்களுக்கு சமமான 2,29,000 டன் பிளாஸ்டிக்குகள் மத்தியதரைக் கடலில் கலந்து கொண்டிருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. மொத்த பிளாஸ்டிக் கசிவின் 94 சதவிகிதத்திற்கு தவறாக நிர்வகிக்கப்பட்ட கழிவுகளைகொண்டுள்ளதாக இந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது.வழக்கம் போல் வணிகம் என்ற சூழ்நிலையில், இந்த எண்ணிக்கை 2040-க்குள் ஆண்டுக்கு 500,000 டன்களை எட்டும் எனவும் கடலுக்குள் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டுவதை குறைக்க கடுமையான சட்ட திட்டங்களும் தொடர் கண்காணிப்பும் தேவைப்படும் என தெரிவித்துள்ளனர்.

IUCNன் கடல் திட்டத்தின் இயக்குநர் மின்னா எப்ஸ் இது குறித்து தெரிவிக்கையில், பிளாஸ்டிக் மாசுபாடு
நிலப்பரப்பு, கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு  நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். இதனால் கடல்
விலங்குகள் சிக்கிக் கொள்ளலாம் அல்லது பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கலாம், இறுதியில் சோர்வு மற்றும் பட்டினியால் அவை இறந்துவிடவும் வாய்ப்புகள் ஏராளம் என்று அவர் கூறினார்.IUCNன் அறிக்கை படி, இந்த கழிவுகளை கடலுக்குள் வெளியிடும் முதல் 100 நகரங்களில் மட்டும் கழிவு
மேலாண்மை மேம்படுத்தப்பட்டால் ஒவ்வொரு ஆண்டும் மத்தியதரைக் கடலுக்குள் 50,000 டன் பிளாஸ்டிக் கசிவு சேர்வதை தவிர்க்கலாம் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

தெற்கு ஸ்பெயினின் மலகாவை மையமாகக் கொண்ட மத்திய தரைக்கடல் ஒத்துழைப்புக்கான ஐ.யூ.சி.என் மையத்தின் தலைவர் அன்டோனியோ ட்ரோயா இதுபற்றி கூறுகையில், மத்திய தரைக்கடல், கடல் படுகை பகுதியில் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை, கடலுக்குள் பிளாஸ்டிக் கசிவை ஆண்டுக்கு 50,000 டன்னை
குறைக்கும்.அரசாங்கங்கள், தனியார் துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள், பிற தொழில்கள், நுகர்வோர் செயல்முறைகள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைக்க, புதுமைகளில் முதலீடு செய்ய, நிலையான நுகர்வு முறைகள் மற்றும் மேம்பட்ட கழிவு மேலாண்மை நடைமுறைகளை பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினார். 

உணவகங்களில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். ஸ்ட்ரா அவசியம் என்றால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய கண்ணாடி ஸ்ட்ராக்களை
வாங்கவும். கடைக்கு செல்லும்போது மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளைப் பயன்படுத்தவும். ஒரு பிளாஸ்டிக் பை அழிவதற்கு 1,000 ஆண்டுகள் ஆகலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வது அவசியம்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Plastics, Pollution

அடுத்த செய்தி