Home /News /national /

விரைவில் மின்சார ட்ராக்டர், லாரிகள் அறிமுகம் - நிதின் கட்கரி தகவல்

விரைவில் மின்சார ட்ராக்டர், லாரிகள் அறிமுகம் - நிதின் கட்கரி தகவல்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

தற்போதைய சூழலில் 1,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை, ஆனால் 730 கோடி லிட்டர் தான் உற்பத்தி செய்கிறோம் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

    நாட்டில் கட்டுமானம் மற்றும் வேளாண்துறைகளில் எத்தனால் கொண்டு இயங்கும் இயந்திரங்களை அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டு சர்க்கரை மாநாட்டில் நிதின் கட்கரி பங்கேற்று பேசினார். அப்போது நாட்டில் எத்தனால் தேவை குறித்தும், அதை பூர்த்தி செய்ய கரும்பு ஆலைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.

    அவர் பேசுகையில், "இந்தியா மாற்று எரிசக்திக்கு மாற்றம் செய்ய வேண்டிய காலம் இது. அதற்கு எத்தனால் முக்கிய பங்களிப்பாக உள்ளது. தற்போதைய சூழலில் 1,200 கோடி லிட்டர் எத்தனால் தேவை. ஆனால், 730 கோடி லிட்டர் தான் உற்பத்தி செய்கிறோம். உலகில் சர்க்கரை தேவை தற்காலிகமாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய்  பேரல் ஒன்றுக்கு 140 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை மெல்லக் குறைய ஆரம்பித்தால் சர்க்கரையின் விலையும் குறையத் தொடங்கும். மெத்தனால், எத்தனால் மற்றும் மின்சார வாகனங்கள் தான் நாட்டின் எதிர்காலமாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மின்சார வாகனங்கள் குறித்து நான் பேசிய போது மக்கள் நம்பிக்கை இல்லாமல் கேள்வி கேட்டார்கள். இப்போது சந்தையில் மின்சார வாகனங்களுக்கு நல்ல தேவை உள்ளது. மக்களுக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: நாட்டின் முதல் ஹெட்ரோலோகஸ் கோவிட் தடுப்பூசி - கோர்பேவாக்ஸ் பூஸ்டருக்கு அனுமதி

    எத்தனால் பயன்பாடு கொண்டும் இயங்கும் விதமான வாகனங்களை உருவாக்க பஜாஜ் மற்றும் ஹீரோ ஆகிய நிறுவனங்களை வலியுறுத்தவுள்ளேன். அதற்கு ஏற்றவாறு என்ஜின்களை நிறுவனங்கள் வடிவமைக்க வேண்டும். இந்த துறையில் கவனம் செலுத்தி நாடு முழுவதும் மின்சார டிராக்டர்கள், லாரிகளை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கொண்டுள்ளது" என்றார்.  இந்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே கலந்துகொண்டார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Agriculture, Nitin Gadkari

    அடுத்த செய்தி