மம்தா பானர்ஜி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி? பாஜகவை வீழ்த்த வியூகம்

மம்தா பானர்ஜி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி? பாஜகவை வீழ்த்த வியூகம்

மம்தா பானர்ஜி

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மம்தா பானர்ஜி தலைமையேற்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

 • Share this:
  மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கடும் எதிர்ப்புகளையும் மீறி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 217 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதனையடுத்து, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தலைமையேற்று வழிநடத்த தேசிய முகமாக மம்தா பானர்ஜியை முன்னிறுத்தும் பணிகள் நடைபெறுவதறாக செய்திகள் வெளிவருகின்றன. மம்தா பானர்ஜியை தலைவராக முன்னிறுத்த காங்கிரஸும் சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

  மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டுவருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தற்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இருந்துவருகிறார். கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்துவதில் பெரிய தடுமாற்றம் இருந்தது. இந்தநிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் பா.ஜ.கவுக்கு எதிராக மிக வலிமையான குரல் எழுப்பி மிகப்பெரும் வெற்றியைப் பதிவு செய்த மம்தா பானர்ஜியை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக நியமிப்பதற்கான திட்டங்கள் தொடங்கியுள்ளன. அதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக தொலைபேசியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன.

  காங்கிரஸ் தலைமை குறித்து கேள்வி எழுப்பிய ஜி-23 என்று அழைக்கப்படும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோனியா காந்தியின் இல்லத்துக்கு அழைத்து வந்த நபர் மம்தா பானர்ஜியை ஒப்புக்கொள்ளவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர், சஞ்சய் காந்தியின் காலத்தில் இந்திய இளைஞர் காங்கிரஸுக்கு மம்தா பானர்ஜியை பொறுப்புக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது.

  ராகுல் காந்தி அல்லது நேரு-காந்தியின் குடும்பத்தைச் சேர்ந்தவரின் முக்கியத்துவம் என்பது வெறுமனே கட்சியை கட்டுக்கோப்பாக வைப்பது மட்டுமல்ல. பொதுமக்கள் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு, வெளியறவுக் கொள்கை, பொருளாதாரம் உள்ளிட்ட தேச முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் குறித்து ராகுல் - சோனியா காந்தி கேள்வி எழுப்புவதும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

  காங்கிரஸ் கட்சியிலுள்ளவர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மம்தா பானர்ஜியை கொண்டுவருவதற்கு சோனியா காந்தி ஒப்புக்கொண்டால் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கொண்டுவரப்படுவார் என்று கருதுகின்றனர். நாடாளுமன்ற விவகாரத்திலும், உட்கட்சி விவகாரத்திலும் ராகுல் காந்தி கவனம் செலுத்தும்போது, பிரியங்கா காந்தி பிரச்சாரத்திலும், கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியிலும் கவனம் செலுத்தவேண்டும்.

  2014-ம் ஆண்டிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயலற்ற நிலையில் உள்ளது. 2004-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டபோதிலிருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டது. பிரதமர் பதவிலியிலிருந்து மன்மோகன் சிங் விலகிய 2014-ம் ஆண்டு வரை இந்த வானவில் கூட்டணி இருந்தது. பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணி அல்லாத கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தலை எதிர்கொண்டனர்.

  தற்போது, எதிர்கள் ஒன்றிணைந்து வானவில் கூட்டணியை அமைக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக வருவதற்கு சரத் பவார் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: