ஹோம் /நியூஸ் /இந்தியா /

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்... ஹைதராபாத்தில் நடந்த விபரீத சம்பவம்

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்... ஹைதராபாத்தில் நடந்த விபரீத சம்பவம்

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்

மேம்பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹோட்டலாக மாற்ற லாரியில் கொண்டு செல்ல போட்ட போது பாலத்தின் அடியில் விமானம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Hyderabad, India

  தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிஸ்தா ஹவுஸ் நிறுவனத்தினர் பழைய விமானத்தை ஓட்டலாக மாற்றி வாடிக்கையாளர்களை கவர முடிவு செய்தனர். இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் பழைய விமானம் ஒன்றை வாங்கி ராட்சத லாரியில் ஹைதரபாத் கொண்டு சென்றனர்.

  ராட்சத லாரியில் ஏற்றப்பட்ட விமானம் சாலை வழியாக ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆந்திர மாநிலம் ​​பாபட்லா மாவட்டம்மேதரமெட்லாவில் உள்ள மேம் பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்டது.

  Also Read : பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படம் எடுத்த ஊழியர்.. அதிர்ச்சி சம்பவம் அம்பலம்!

  இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேம்பாலத்தில் இருந்து விமானம் சேதமடையாமல் கவனமாக வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வேறு வழியில் விமானம் ஹைதராபாத் நோக்கி பயணித்து கொண்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trending, Viral