• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கேரளா விமான விபத்து: மீட்பு நடவடிக்கைகளுக்கு அமித்ஷா உத்தரவு

கேரளா விமான விபத்து: மீட்பு நடவடிக்கைகளுக்கு அமித்ஷா உத்தரவு

உள்துறை அமைச்சர் அமித்ஷா

உள்துறை அமைச்சர் அமித்ஷா

  • Share this:
    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது விபத்திற்குள்ளானது மன வேதனை அளிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், விமான விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.



     

    துபாயில் இருந்து 190 பயணிகளுடன் கேரளாவிலுள்ள கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர். 14 பேர்  உயிரிழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: