விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையம் அமைக்க திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்

ககன்யான் திட்டத்தின் தொடர்ச்சியாக தனி விண்வெளி நிலையம் திட்டம் இருக்கும் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

news18
Updated: June 14, 2019, 7:46 AM IST
விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையம் அமைக்க திட்டம் - இஸ்ரோ தலைவர் சிவன்
இஸ்ரோ தலைவர் சிவன்
news18
Updated: June 14, 2019, 7:46 AM IST
விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,  மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் 2022ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்றும், விண்வெளியில் இந்தியாவுக்கு சொந்தமான ஆய்வு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ககன்யான் திட்டத்துக்கு ஆறு அல்லது ஏழு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இரண்டாண்டு பயிற்சிக்குப் பிறகு அவர்கள் விண்வெளிக்குப் புறப்படுவர் என்றும் சிவன் கூறினார்.

மேலும் 2030-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கான தனி ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அது 20 டன் எடை கொண்டதாகவும் இருக்கும் என்றும் சிவன் தெரிவித்தார்.

விண்வெளி ஆய்வு மையத்தில் துவக்கத்தில் 15 முதல் 20 நாட்கள் இந்திய விண்வெளி வீரர்கள் தங்குவார்கள் என்றும், ககன்யான் திட்டத்தின் தொடர்ச்சியாக தனி விண்வெளி நிலையம் திட்டம் இருக்கும் என்றும் சிவன் தெரிவித்துள்ளார்.

Also See...

ஜூலையில் விண்ணில் பாய்கிறது சந்திராயன் - 2 விண்கலம்...!
First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...