ஹோம் /நியூஸ் /இந்தியா /

சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன் 8 நாட்களுக்கு பின் விடுவிப்பு

சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேச சிறுவன் 8 நாட்களுக்கு பின் விடுவிப்பு

கடத்தப்பட்ட இந்திய சிறுவன்

கடத்தப்பட்ட இந்திய சிறுவன்

ஜனவரி 23ம் தேதியன்று, இந்திய ராணுவத்தினர் ஹாட் லைனை ஆக்டிவேட் செய்து, சீன ராணுவத்தினரிடம் சிறுவன் குறித்து பேசியுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கடத்தப்பட்ட அருணாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனை சீனா ராணுவம் இந்தியாவிடம் ஒப்படைத்தது.

சீனாவை ஒட்டிய அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தின் சிடோ எனும் கிராமத்தைச் சேர்ந்த மிராம் தாரோன் என்ற 17 வயது சிறுவன், ஜாணி யாயிங் என்ற தனது நண்பருடன் சேர்ந்து இந்திய - சீன எல்லையை ஒட்டிய லுங்டா ஜோர் பகுதியில் Tsangpo நதியில் வேட்டையாடுவதற்காக சென்றிருந்த நிலையில், அங்கு வந்த சீன ராணுவத்தினர் திடீரென மிராம் தாரோன் மற்றும் ஜாணி யாயிங் (வயது 27) ஆகிய இருவரையும் சிறை பிடிக்க முயற்சித்துள்ளனர்..

இருப்பினும் சுதாரித்துக் கொண்ட ஜாணி யாயிங், சீன ராணுவத்தினரின் பிடியில் இருந்து தப்பியோடி வந்து மிராம் தாரோன் சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்ட விவரத்தை சக கிராமத்தினரிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். கிழக்கு அருணாச்சல் பிரதேச பாஜக எம்.பி தபிர் காவோ, உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து சிறுவனை மீட்குமாறு கோரிக்கை வைத்தார்.

Also read:    ஆடைகளை கிழித்து, தலைமுடியை வெட்டி.. பலாத்காரம் செய்த பெண்ணை, பெண்களே ஊர்வலமாக அழைத்துச் சென்று அடி உதை!! - வீடியோ

இந்திய ராணுவனும், சிறுவன் தொடர்பாக சீன ராணுவத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இன்று அச்சிறுவனை சீனா ராணுவத்தினர் இந்திய ராணுவத்தினரின் வசம் ஒப்படைத்துள்ளனர்.

சிறுவன் ஒப்படைக்கப்பட்டது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன் ரிஜுஜூ ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, “அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் மிரான் தாரோனை, சீன ராணுவத்தினர், இந்திய ராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். மருத்துவ பரிசோதனை போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது” என தெரிவித்துள்ளார். சீன ராணுவத்தினர் நல்ல முறையில் இந்த விஷயத்தில் நடந்து கொண்டதாகவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஜனவரி 23ம் தேதியன்று, இந்திய ராணுவத்தினர் ஹாட் லைனை ஆக்டிவேட் செய்து, சீன ராணுவத்தினரிடம் சிறுவன் குறித்து பேசியுள்ளனர். அதனடிப்படையில் ஒரு வாரத்திற்குள் சிறுவன் இந்தியா திரும்புவான் என அப்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 19ம் தேதி கடத்தப்பட்ட சிறுவன், 8 நாட்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

First published:

Tags: China, India vs China, Indian army