கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு நிவாரணம் வழங்க முடியாது - மத்திய அரசு

உச்ச நீதிமன்றம்

பேரிடர் நிவாரணம் என்பது புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

  • Share this:
    கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண நிதி வழங்க முடியாது என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தவர்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக பேரிடர் நிதியிலிருந்து, 4 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது, மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் தொடர்பான கொள்கையைத் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  இதையடுத்து, 183 பக்கள் கொண்ட பிரமாண பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.  அதில், இந்தியாவில் கொரோனா தொற்றால் சுமார் 3 லட்சத்து 85 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எனவே, உயிரிழந்த அனைவருக்கும் தலா நான்கு லட்ச ரூபாய் வழங்க முடியாது எனவும், அவ்வாறு செய்தால் பேரிடர் நிவாரண நிதியே மொத்தமாக தீர்ந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு வருவாய் குறைந்துள்ள நிலையில் நிவாரணம் வழங்குவதற்கு கூடுதல் செலவு செய்தால்,  நோய்த்தொற்று தடுப்பு உள்ளிட்ட பிற சுகாதார பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என விளக்கமளிக்கப்பட்டு உள்ளது.  பேரிடர் நிவாரணம் என்பது புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Also Read: கல்யாணம் வெச்சு இருக்கீங்களா... நீங்க இந்த மாவட்டமா இருந்தா இ-பாஸ் கட்டாயம்

    மேலும், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கிவிட்டு, பிற நோய்களால் இறப்பவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் அது நியாயமாக இருக்காது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: