ஹரியானாவில் சச்சின் பைலட்: 15 எம்.எல்.ஏக்கள் ஆதரவு - ராஜஸ்தானில் நடப்பது என்ன?

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், துணைமுதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவில் சச்சின் பைலட்: 15 எம்.எல்.ஏக்கள் ஆதரவு - ராஜஸ்தானில் நடப்பது என்ன?
அசோக் கெல்லாட் சச்சின் பைலட்
  • Share this:
ராஜஸ்தான் துணை முதலமைச்சராகவும், அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் சச்சின் பைலட் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவருக்கும் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும் இடையே நடைபெற்று வந்த பனிப்போர், வெளிப்படையாக வெடித்தது. சச்சின் தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் முகாமிட்டார். சச்சினுக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், அசோக் கெலாட் பெரும்பான்மையை இழந்து விட்டதாகவும் அவரது தரப்பு தெரிவித்தது.  இதனிடையே சச்சினை சமாதானப்படுத்தும் முயற்சியில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கலந்து கொண்டார். கூட்டத்தில் 102 எம்எல்ஏக்கள் கலந்து கொண்டதாக அசோக் கெலாட் தரப்பு கூறியுள்ளது. கூட்டத்தில் சச்சின் பைலட்டை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து துணை முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளதாக ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்தார்.  மேலும் சச்சின் ஆதரவாளர்களான விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவதாகவும் சுர்ஜிவாலா அறிவித்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதலமைச்சர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார். அப்போது சச்சின் பைலட், விஷ்வேந்தர் சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகியோரை அமைச்சரவையில் இருந்து நீக்க அசோக் கெலாட் பரிந்துரைத்தார்.  இதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சச்சின் பைலட் நீக்கப்பட்டதை அடுத்து, ஜெய்ப்பூரில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அவரது பெயர்ப்பலகை அகற்றப்பட்டது.  தனது ட்விட்டர் பக்கத்தில் துணை முதலமைச்சர் மற்றும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் எனக் குறிப்பிட்டிருந்ததை சச்சின் பைலட்டும் நீக்கினார். உண்மையை மறைக்க முடியுமே தவிர, தோற்கடிக்க முடியாது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டதை தொடர்ந்து, புதிய தலைவராக கோவிந்த் சிங் தோடஸ்ரா (Govind Singh Dotasra ) நியமிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், ஹரியானாவில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் சொகுசு விடுதியில் சச்சின் பைலட் தங்கியிருக்கிறார்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading