• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அமெரிக்க அதிபர் திறந்து வைக்கவிருக்கும் கிரிக்கெட் மைதானம்: சிறப்புகள் என்னென்ன?

அமெரிக்க அதிபர் திறந்து வைக்கவிருக்கும் கிரிக்கெட் மைதானம்: சிறப்புகள் என்னென்ன?

மொதேரா கிரிக்கெட்  மைதானம்

மொதேரா கிரிக்கெட் மைதானம்

  • Share this:
    அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை வருகிற 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்த மைதானத்தின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது காணலாம்...

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மொதேராவில் 1982-ம் ஆண்டு சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டது. இந்த மைதானத்தில் இதுவரை 12 டெஸ்ட் மற்றும் 24 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு மொதேரா மைதானத்தை இடித்து 63 ஏக்கர் பரப்பளவில் புதிய ஸ்டேடியம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், அந்த பணிகள் முடிவுற்று தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன. வருகிற 24-ஆம் தேதி குஜராத் மாநிலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து மொதேரா மைதானத்தை திறந்து வைக்கிறார். இதன் திறப்பு விழாவுக்கு 1,500 பேருந்துகள் மூலம் மக்களை அழைத்து வந்து மைதானத்தில் அமர வைக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

    700 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். இதனால் இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக கருதப்படுகிறது.

    ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் மைதானம் தான் தற்போது உலகின் மிகப் பெரிய ஸ்டேடியமாக இருந்து வருகிறது. அதில் 90,000 ரசிகர்கள் அமரலாம். அதை முறியடிக்கும் விதமாக அகமதாபாத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் 70 கார்ப்பரேட் பாக்ஸ், நான்கு உடை மாற்றும் அறைகள், ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் உள்ளன.

    இந்த ஸ்டேடியத்தில் தொடக்க ஆட்டமாக ஆசிய லெவன்- உலக லெவன் அணிகள் மோதும் போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கேட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருக்கிறார். ஐ.சி.சி. ஒப்புதல் அளித்தால் இந்த போட்டி மார்ச் மாதம் மொதேரா மைதானத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Add Also...

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Gunavathy
    First published: