காங்கிரசுக்கு மீண்டும் திரும்பிய அதிருப்தி எம்எல்ஏ. : மற்றவர்களையும் சமாதானப்படுத்த தீவிர முயற்சி

News18 Tamil
Updated: July 14, 2019, 9:07 AM IST
காங்கிரசுக்கு மீண்டும் திரும்பிய அதிருப்தி எம்எல்ஏ. : மற்றவர்களையும் சமாதானப்படுத்த தீவிர முயற்சி
எம்.எல்.ஏ. நாகராஜ்
News18 Tamil
Updated: July 14, 2019, 9:07 AM IST
கர்நாடக அரசியலில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ நாகராஜ் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்களை சமாதானப்படுத்துவதற்காக காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.

கர்நாடகாவில் சபாநாயகருக்கு எதிராக மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். அதில் சபாநாயகர் தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்க மறுப்பதாகவும், உடனடியாக ராஜினாமாவை ஏற்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே துணை முதலமைச்சர் ஜி. பரமேஸ்வரா, அமைச்சர் சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி எம்எல்ஏக்களை தனித்தனியே சந்தித்து சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இதில் அதிருப்தி எம்எல்ஏவான நாகராஜ் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் சித்தராமையாவை சந்தித்து பேசிய அவர், இனி காங்கிரஸ் கட்சியிலேயே தொடரப்போவதாகவும் உறுதியளித்துள்ளார்.

நாகராஜை தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சுதாகர் மற்றும் ராமலிங்க ரெட்டி ஆகியோர் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெற முன்வருவார்கள் என காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டி ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபடுவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத் மற்றும் கமல்நாத் ஆகியோர் நேற்றிரவு கர்நாடகா வந்தடைந்தனர்.

இவர்கள் இருவரும் இன்று காலை சித்தராமையாவை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். அப்போது சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...
இதற்கிடையே, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் நாளை கூடுகிறது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டுவரும்படி முதலமைச்சர் குமாரசாமியை வலியுறுத்தப் போவதாக பாஜக தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
First published: July 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...