நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு பெண் குழந்தைகள்; மீட்கப் போராடும் பெற்றோர்! என்ன நடந்தது?

ஆசிரம ஊழியர்கள் ஆசிரமத்திற்கு உள்ளேயே அதிகாரிகள் மற்றும் பெற்றோரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நள்ளிரவு ஒரு மணி வரை உள்ளே அனுமதிக்க ஆசிரம நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

நித்தியானந்தா ஆசிரமத்தில் இரண்டு பெண் குழந்தைகள்; மீட்கப் போராடும் பெற்றோர்! என்ன நடந்தது?
நித்தியானாந்தா, பாதிக்கப்பட்ட பெண்கள்
  • News18
  • Last Updated: November 18, 2019, 10:49 PM IST
  • Share this:
நித்தியானந்தாவின் தனிச் செயலாளராக இருந்தவர் தற்போது அவரின் இரண்டு மகள்களையும் சட்டத்தின் உதவியுடன் ஆசிரமத்திலிருந்து மீட்பதற்கு போராட்டம் நடத்திவருகிறார்.  

லட்சக்கணக்கானவர்களால் குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நித்யானந்தாவையும், சர்ச்சைகளையும் பிரிக்கவே முடியாது. இந்த முறை நெருங்கிய தனிப்பட்ட செயலர்களில் ஒருவரின் மகளே, பாலியல் வன்கொடுமை என்ற அணுகுண்டை துாக்கி வீசியுள்ளார்.

நித்யானந்தாவால் ஈர்க்கப்பட்ட கும்பகோணத்தை பூர்வீகமாகக்கொண்ட ஒருவர், 2016-ம் ஆண்டு அவரிடம் சீடராக சேர்ந்தார். சில மாதங்களில் நித்யானந்தாவின் நான்கு தனிப்பட்ட செயலர்களில் ஒருவராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் உள்ள குருகுலத்தில் தனது 3 மகள்களையும் ஒரு மகனையும் அவர் சேர்த்தார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் நித்யானந்தா தென்னாப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடார் நாட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது


அந்நாட்டின் தீவுகளில் ஒன்றை விலைக்கு வாங்கி அங்கு நித்யானந்தா தனது ஆசிரமவாசிகள் சிலருடன் தங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில்தான், நவம்பர் 2-ம் தேதி, குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது வாரிசுகளை சந்திக்கச் சென்றார் அந்த செயலாளர்.

மனைவியுடன் சென்ற செயலாளரை, மகள்களை சந்திக்க விடாமல் ஆசிரமத்தில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர்.  நித்யானந்தாவின் தனிப்பட்ட செயலாளரான தனக்கே அனுமதி ஏன் மறுக்கப்படுகிறது என்று அவர் கேட்க, இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து, குஜராத் மாநிலம் விவேகானந்த நகர் காவல்நிலையத்தில் நித்தியானந்தவின் செயலாளர் புகார் அளித்தார். இதையடுத்து மகளிர் போலீசார் சிலருடன் விவோகனந்த நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்திற்கு சென்ற போலீசார், செயலாளரின் ஒரு மகள், மகனை மட்டும் மீட்டனர்.

18 வயது நிரம்பிய, செயலாளாரின் இன்னோர் மகளை போலீசார் அழைத்தபோது, தான் மேஜர் என்றும் ஆசிரமத்தில் தான் தங்கியிருப்பேன் என்றும் அடம் பிடித்துள்ளார். 10 மணி நேரமாக நடந்த மோதல் முடிவுக்குவந்த நிலையில், செயலாளரின் இரண்டு மகள்கள் வெளியிட்டுள்ள வீடியோக்கள் பெற்றோரை அதிர்ச்சியடையச் செய்தது.

அஹமதாபாத் ஆசிரமத்தில் உள்ள ஒரு மகள் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘தங்கைக்கு ஆதரவாக, அவரது சகோதரியும் ஒரு வீடியோ ஒன்றை முகநூலில் வெளியிட்டார். மகள்கள் வெளியிட்ட வீடியோவில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, நித்தியானந்தாவின் செயலாளரிடம் விளக்கம் கேட்டது நியூஸ்18 தமிழ்நாடு.

தனது மகள்களை யாரோ ஆட்டுவிப்பதாகவும், இருவரையும் மீட்க சட்டரீதியாக நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அப்போது தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்தில் மகளை மீட்க பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு 10 மணி அளவில் சோதனை நடத்த அனுமதி பெற்று, போலீசாருடன் குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள் சென்றனர்.

மகளை சந்திக்க பெற்றோரை அனுமதிக்குமாறு ஆசிரம ஊழியர்களிடம் கூறினர். ஆனால், ஆசிரம ஊழியர்கள் ஆசிரமத்திற்கு உள்ளேயே அதிகாரிகள் மற்றும் பெற்றோரை அனுமதிக்க மறுத்துவிட்டனர். நள்ளிரவு ஒரு மணி வரை உள்ளே அனுமதிக்க ஆசிரம நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். இதை அடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அதிரடியாக பெண்ணின் பெற்றோர் மற்றும் மகளிர் ஆணைய அதிகாரிகளை அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு ஒரு மணிக்கு பெற்றோருடன் உள்ளே நுழைந்த குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகள், போலீசார் தொடர்ந்து சோதனை நடத்தினர்.

ஆசிரமம் முழுவதும் சோதனை நடத்தியும், அந்த பெண் ஆசிரமத்திற்குள் இல்லை என்பது தெரிய வந்தது.

நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த பெண் வெளியில் சென்றிருப்பதாக ஆசிரம நிர்வாகிகள் தெரிவித்துவிட்தாக சோதனையில் ஈடுபட்ட டிஎஸ்பி ஷர்தா தெரிவித்தார்.

ஆசிரமத்தின் கமிட்டி மெம்பர் அந்த பெண்ணின் விருப்பப்படி அவர் தொடர்ந்து ஆசிரமத்திலேயே தங்க வைக்கும்படி விண்ணப்பித்துள்ளார். அவர் திரும்பிய பிறகு தான் விசாரிக்க இயலும். அந்தப் பெண் ஆசிரமத்தில் தங்குவதை விருபுவதாக கூறுகிறார். தன் தந்தையுடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.

37 சிறுமிகள் ஆசிரமத்திற்குள் தங்கியிருந்தது தெரிய வந்தது. எனினும் சிறுமிகளை மீட்டு வெளியில் கொண்டு வர, அதிகாரிகளால் முடியவில்லை.

இதனால் திங்கட் கிழமை, பெற்றோர் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து மகள்களை மீட்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

பெங்களூரு பிடரி ஆசிரமத்தில் இருந்து, குஜராத் ஆசிரமத்திற்குள் அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நித்தியானந்தாவின் முன்னாள் தனிச் செயலாளரின் மகள் எங்கே உள்ளார் என தெரியாமல் பெற்றோர் பரிதவித்து உள்ளனர்.

Also see:


 
First published: November 18, 2019, 10:49 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading