இந்த நாட்டில் பீட்சா டெலிவரி செய்யலாம்..ரேஷன் டெலிவரி செய்யக்கூடாதா... மத்திய அரசை சாடும் அரவிந்த் கெஜ்ரிவால்

அரவிந்த் கெஜ்ரிவால்

70 லட்சம் மக்களின் சார்பாக கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம்.

 • Share this:
  கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் வீடுகளுக்கே நேரடியாக கொண்டு வந்து தரப்படும் என டெல்லி அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு மத்திய அரசே தடையாக இருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்திற்கு கடந்த ஆண்டு கெஜ்ரிவால் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் இதற்கு மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது வினியோக துறை எதிர்ப்பு தெரிவித்தது. 'இந்த திட்டம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும்' என தெரிவித்திருந்தது. இதையடுத்து திட்டத்தை அமல்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

  Also Read: ‘நான் அட்வகேட்.. மவனே உன் யூனிபார்ம் கழட்டிடுவேன்’ - சென்னையில் போக்குவரத்து காவலரை மிரட்டிய பெண்

  மத்திய நுகர்வோர் உணவு மற்றும் பொது விநியோக துறை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா’ என்ற பெயரை நீக்கி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் ரேஷன் பொருட்களை டெலிவரி செய்ய கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நடந்து வருவதை காரணம் காட்டி டெல்லி துணை நிலை ஆளுநரும் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்துவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதுகுறித்து பேசியுள்ள அரவிந்த கெஜ்ரிவால், இந்த திட்டமானது ரேஷன் கடைகளுக்கு வெளியே மக்கள் காத்திருப்பதை தவிர்க்கும். கொரோனா நோய்த்தொற்றின் அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே போகாத மக்களும் இருக்கிறார்கள். வெளியே சென்றால் கொரோனா தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். வயதானவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை.

  Also Read: வடிவேலு பாணியில் டாஸ்மாக்கில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் - விசாரிக்கும் காவல்துறை

  இந்த நாட்டில் பீட்சா, பர்கர் டெலிவரி செய்யலாம். நலிவுற்ற மக்களுக்கு ரேஷன் பொருள்களை டெலிவரி செய்யக்கூடாதா. இந்த நகரில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இந்த 70 லட்சம் மக்களின் சார்பாக கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். தயவு செய்து இந்த திட்டத்தை நிறுத்த வேண்டாம். இது தேசத்தின் நலனுக்கானது. நாட்டின் நலனுக்காக கூறப்படும் விஷயத்தில் எந்த அரசியலும் இருக்கக் கூடாது. இந்த திட்டத்தை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு நிறுத்திவிட்டது. கேட்டால் அனுமதி பெறவில்லை என்கிறது. ஒன்றல்ல 5 முறை உங்களிடம் கேட்டோம். சட்டப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அது மரியாதையாக இருக்காது என நாங்கள் செய்யவில்லை.

  இந்த நகரத்தில் ரேஷன் மாஃபியாவை முடிவுக்கு கொண்டு வர இது ஒரு வழியாகும். 17 வருடங்களுக்கு முன்பு ரேஷன் மாஃபியாவுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக 7 முறை தாக்கப்பட்டேன். ரேஷன் மாஃபியா வலுவானது. ஒரு அரசாங்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பது இதுவே முதல்முறை” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: