முகப்பு /செய்தி /இந்தியா / 120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

120 மணி நேர ரெய்டு.. ரூ.257 கோடி ரொக்கம் பறிமுதல்.. தொழிலதிபர் வீட்டில் பணப் புதையல்..

Kanpur Raid

Kanpur Raid

தொழிலதிபர் வீட்டில் இரவு பகலாக சுமார் 120 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட 257 கோடி ரூபாய் ரொக்கப்பணம் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கான்பூரைச் சேர்ந்த வாசனை திரவிய ஆலை அதிபர் வீட்டில் 120 மணி நேரமாக நடத்தப்பட்ட ரெய்டில் 257 கோடி ரூபாய் பணம் ரொக்கமாக பறிமுதல் செய்யப்பட்டிருப்பதுடன், பல்வேறு சொத்து ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் சமீபத்திய ஐடி ரெய்டுகளில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டுள்ள ரெய்டு. கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம், கரன்சி எண்ணும் மெஷின்கள் மூலம் பணம் எண்ணப்பட்டு வரும் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் கவனத்தை ஈர்த்த பின்னரே மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நடத்தியிருக்கும் இந்த அதிரடி ரெய்டானது பரபரப்பாக பார்க்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த பியூஷ் ஜெயின் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் பெருமளவு வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடந்த வாரம் அகமதாபாத்தைச் சேர்ந்த மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய அதிகாரிகள் கான்பூர், கனோஜ் உள்ளிட்ட இடங்களில் பியூஷ் ஜெயினுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.

Also read:  நடிகை சன்னி லியோனுக்கு ம.பி அமைச்சர் எச்சரிக்கை - 3 நாட்கள் கெடு!

அப்போது ஜெயினுக்கு சொந்தமான மூதாதையர் வீட்டில் 18 ரகசிய லாக்கர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த லாக்கர்களை திறக்க 500 சாவிகளை கொண்ட சாவிக் கொத்தும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த லாக்கர்களை திறந்து சோதனை செய்த போது அனைத்திலும் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் சுவர் போல அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து மலைத்துப் போயினர்.

Also read:  பெண்கள் தனியாக பயணம் செய்ய தாலிபான்கள் தடை - ஆப்கனில் தொடரும் சர்ச்சை உத்தரவுகள்

அதிகளவு பணம் இருந்ததால் வங்கிகளின் உதவியை நாடிய அதிகாரிகள் கரன்சி எண்ணும் மெசின்களை வரவழைத்து பணத்தை எண்ணும் பணியை தொடங்கினர். இரவு பகலாக சுமார் 120 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட 257 கோடி ரூபாய் ரொக்கப்பணம் எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. பணம் தவிர்த்து விலையுயர்ந்த 16 சொத்துக்களும் அவற்றின் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் 4 கான்பூரிலும், 7 கனோஜிலும், 2 மும்பையிலும், டெல்லியில் ஒன்றும், துபாயில் இரண்டு சொத்துக்களும் இருப்பது தெரியவந்ததுள்ளது. மேலும் பல கிலோ தங்கமும் கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also read:  டான்ஸ் பயில வந்த சிறுமிகளை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த மாஸ்டர்!

120 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் போது சுமார் 50 மணி நேரம் பியூஷ் ஜெயினிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பியூஷ் ஜெயின் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

First published:

Tags: Income Tax raid, IT Raid