ஹரியானா மாநிலத்தில் பிட்புல் வளர்ப்பு நாய் பக்கத்து வீட்டில் இருக்கும் 9 வயது சிறுமியை கடித்ததில் சிறுமியின் முகம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஹரியானா மாநிலம் கர்னல் பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி மஹி. இவர் தனது வீட்டு வராண்டா பகுதியில் விளையாடியுள்ளார். அப்போது பக்கத்து வீட்டுகாரர் அவர் வளர்க்கும் பிட்புல் நாயின் சங்கிலியை அவிழ்த்து நாயை வெளியே விட்டுள்ளார். இந்த நாய் வெளியே வந்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாஹியை கடித்து தாக்கியுள்ளது.
இதை பார்த்து பதறிப்போன சிறுமியின் குடும்பத்தினர், நாயை துரத்தி சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலில் சிறுமியின் முகத்தின் ஒரு பகுதி முற்றிலும் கிழிந்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் கூறிய நிலையில், முகத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படலாம் என்றுள்ளனர். அந்த நாயின் உரிமையாளர் நீண்ட காலமாவே அஜாக்கிரதையாக இருப்பவர் என்றும், நாய் வளர்ப்பு குறித்து அப்பகுதியினர் புகார் அளித்தும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் பெண் உளவாளி விரித்த காதல் வலையில் சிக்கிய அரசு ஊழியர்.. ரகசிய தகவல்களை பகிர்ந்த குற்றத்திற்காக கைது
டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பிட்புல், ராட்வீலர் ரக நாய்களின் தாக்குதல்கள் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக ஹரியானாவின் காசியாபாத் நகராட்சியும் உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் நகராட்சியும் பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. இந்த பிட் புல் ரக நாய் ஆபத்தான வளர்ப்பு பிராணி என்றும் வேட்டை நாய் என்பதால் இதை வளர்ப்பது அவ்வளவு உகந்தது அல்ல எனவும் விலங்கியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dog, Haryana, Pet Animal