முகப்பு /செய்தி /இந்தியா / பெண்ணை கடித்துக் குதறிய பிட்புல் நாய்.. உடம்பெல்லாம் 50 தையல்கள்! பகீர் சம்பவம்!

பெண்ணை கடித்துக் குதறிய பிட்புல் நாய்.. உடம்பெல்லாம் 50 தையல்கள்! பகீர் சம்பவம்!

பிட்புல் வளர்ப்பு நாய் தாக்குதல்

பிட்புல் வளர்ப்பு நாய் தாக்குதல்

இது போன்ற தாக்குதல் தொடரும் சூழலில் ஹரியானா மாநிலத்தின் காசியாபாத் நகராட்சி பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது

  • 1-MIN READ
  • Last Updated :
  • Haryana, India

ஹரியானா மாநிலத்தில் பிட்புல் வளர்ப்பு நாய் கடித்ததில் பெண் ஒருவரின் உடலில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளது. சமீப மாதங்களாகவே வட மாநிலங்களில் பிட்புல் வளர்ப்பு நாய்களின் கொடூர தாக்குதலுக்கு பலரும் ஆளாகி வருகின்றனர். குறிப்பாக டெல்லி, ஹரியானா மாநிலங்களில் இந்த சம்பவம் அதிகம் காணப்படுகிறது. இதில் சில சமயம் உயிரிழப்பு சம்பவங்களும் ஏற்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் காரணத்தினால் உத்தரப்பிரதேசத்தில், கான்பூர் மாநகராட்சி (KMC) கடந்த செப்டம்பர் 27ஆம் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நகர எல்லையில் பிட் புல் மற்றும் ராட்வீலர் நாய் இனங்களைத் தடை செய்தது.

புட் புல் நாய்

இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு குடும்பத்தில் பெண், இரு குழந்தைகள் உள்ளிட்ட 3 பேரை பிட்புல் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள ரேவாரி மாவட்டத்தில் வசிக்கும் சூரஜ் கடந்த வெள்ளிக்கிழமை தனது மனைவி, குழந்தைகளுடன் வெளியே சென்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர்கள் வளர்த்த பிட்புல் நாய் நான்கு பேர் மீது பாய்ந்து கடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சூரஜ், சுதாரித்து நாயை குச்சியை வைத்து அடித்து அடக்கப் பார்த்துள்ளார். ஆனாலும் நாய் விடாமல் ஆக்ரோஷத்துடன் தொடர்ந்து கடித்துள்ளது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அண்டை வீட்டினர் ஓடிவந்து நாயிடம் இருந்து குடும்பத்தை மீட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் சூரஜ் மனைவி படுகாயம் அடைந்துள்ளார். அவரது முகம், கை, கால்கள் என பல பகுதிகளில் சுமார் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. அதேபோல், இரு குழந்தைகளும் படுகாயம் அடைந்துள்ளனர். மூவரும் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

இதையும் படிங்க: மனைவிக்கு கால் வலி.. 2 பெக் மதுபானம் அருந்தச் சொல்லி மருந்து சீட்டு கொடுத்த மருத்துவர் சஸ்பெண்ட்!

இது போன்ற தாக்குதல் தொடரும் சூழலில் ஹரியானா மாநிலத்தின் காசியாபாத் நகராட்சியும் கான்பூரை போலவே பிட்புல் மற்றும் ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. இந்த பிட் புல் ரக நாய் ஆபத்தான வளர்ப்பு பிராணி என்றும் வேட்டை நாய் என்பதால் இதை வளர்ப்பது அவ்வளவு உகந்தது அல்ல எனவும் விலங்கியல் நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

First published:

Tags: Attack, Haryana, Pet Animal