Home /News /national /

கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடியுள்ளது பினராயி விஜயனின் செம்படை..

கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடியுள்ளது பினராயி விஜயனின் செம்படை..

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

தங்கக் கடத்தல் விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளை கடந்து, கேரள உள்ளாட்சித் தேர்தலில் வாகை சூடியுள்ளது பினராயி விஜயனின் செம்படை... எப்படி நிகழ்ந்தது இந்த வெற்றி

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, 514 கிராம ஊராட்சிகள், 108 வட்டார பஞ்சாயத்துகள், 35 நகராட்சிகள், 10 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் ஐந்து மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.

    இடதுசாரி முன்னிலை கூட்டணிக்கு கிடைத்த அமோக வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ஆளும் அரசின் நலத்திட்டங்கள். தங்கக் கடத்தல் புகார் என மாநில அரசு மீது பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்த அதேவேளையில், வளர்ச்சித் திட்டங்கள் மீது முதல்வர் கவனம் செலுத்தியதும், குறிப்பாக ஏழைகளுக்கு வீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்ததும் பிளஸாக அமைந்துள்ளது.

    பினராயி விஜயனின் மற்றொரு ராஜதந்திரமாக கருதப்படுவது, ஜோஸ்.கே.மணியின் கேரளா காங்கிரஸ்(மணி) கட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டதாகும். காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஜோஸ்.கே.மணியை தன் பக்கம் அழைத்து வந்ததன் மூலம், அகில இந்திய காங்கிரசின் பாரம்பரிய தொகுதிகளான கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டாவில் மார்க்சிஸ்ட் பெருமளவு வெற்றிபெற்றுள்ளது.

    அதேபோல், முழுமையான மதச்சார்பின்மையை கடைபிடித்ததும், மார்க்சிஸ்டின் வெற்றிக்கான ரகசியமாக அறியப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் கூட்டணி ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியுடன் கூட்டணி வைத்தது, ஏராளமான இந்து மத வாக்காளர்களை பினராயி விஜயன் பக்கம் திருப்பியுள்ளது.

    அதேபோல காங்கிரஸ் கூட்டணியில் இஸ்லாமிய இயக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பலர், மார்க்சிஸ்ட் கட்சி பக்கம் திரும்பியுள்ளதும் தெரியவந்துள்ளது. இறுதியாக கொரோனா பரவலை பரவலாக குறைத்தது, 2018 மழை வெள்ள பாதிப்பை சிறப்பாக கையாண்டு பேரிடர்களை கட்டுப்படுத்தியது, மார்க்சிஸ்ட் கூட்டணியின் அமோக வெற்றியின் மையப்புள்ளியாக அமைந்திருக்கிறது.

    150 வாக்காளர்களுக்கு ஒரு நிர்வாகி: அதிமுக தேர்தல் பணிகள் தீவிரம்!

    இதுகுறித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பாஜகவிற்கு கேரளாவில் ஏற்பட்ட நிலைமைதான் தமிழகத்திலும் ஏற்படும் என்றார். பாஜகவின் தோல்வி குறித்து பேசிய எஸ்.ஆர்.சேகர், பல இடங்களில் காங்கிரசும்- கம்யூனிஸ்டும் கூட்டணி அமைத்து பாஜக வெற்றியை தடுத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் முன்பை விட பாஜக அதிகளவில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chief Minister Pinarayi Vijayan, Kerala

    அடுத்த செய்தி