ஹோம் /நியூஸ் /இந்தியா /

Pinarayi Vijayan : பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக 20ஆம் தேதி பதவி ஏற்கிறார்

Pinarayi Vijayan : பினராயி விஜயன் கேரள முதலமைச்சராக 20ஆம் தேதி பதவி ஏற்கிறார்

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கேரள மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் முதலமைச்சராக மீண்டும் பதிவியேற்க உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரள முதலமைச்சராக தொடர்ந்து 2ஆவது முறையாக பினராயி விஜயன், வருகின்ற 20ஆம் தேதி பதவியேற்கிறார். திருவனந்தபுரம் சென்ட்ரல் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆளுநர் முகமது ஆரிஃப் கான், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

கேரள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகத்தைப் போலவே மே 2ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மாபெரும் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து கேரள அமைச்சரவை குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச்செயலாளர் விஜயராகவன், ‘கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளார். அவருடன் 20 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்’ என தெரிவித்தார்.

கேரள அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரள காங்கிரஸ் (எம்), ஜனதா தளம் (எஸ்) மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 2 இடங்கள் சுழற்சி முறையில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணத்தால் பதவியேற்பு நிகழ்ச்சியில் 500 மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், உலகளாவிய ஒப்பந்தம் மூலம் கேரள மாநில அரசு மூன்று கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்கவுள்ளதாக அம்மாநில தெரிவித்தார்.

Must Read : கொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்!

கேரளாவில் புதியதாக 21 ஆயிரம் பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய முதல்வர் பினராயி விஜயன், தடுப்பூசி வாங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். 18 முதல் 44 வயது கொண்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Kerala, Kerala Assembly Election 2021, Pinarayi vijayan